ஹோம் /மதுரை /

National Youth Day 2023 : மதுரை தெப்பக்குளத்தில் அம்பிகா கல்லூரி மாணவிகள் நடத்திய தேசிய இளைஞர் தின பேரணி

National Youth Day 2023 : மதுரை தெப்பக்குளத்தில் அம்பிகா கல்லூரி மாணவிகள் நடத்திய தேசிய இளைஞர் தின பேரணி

X
மதுரை

மதுரை

National Youth Day 2023 : விவேகானந்தரின் சிந்தனைகளை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக பேரணி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

இளைஞர்களால் தான் இந்தியாவை மாற்ற முடியும் என்றும், நாட்டுப்பற்று மிக்க 100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவை உயர்த்தி காட்டுகிறேன் என்றும் கூறிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்நிலையில் விவேகானந்தரின் சிந்தனைகளை இன்றைய தலைமுறையினருக்கும் எடுத்துரைக்கும் வகையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாகபேரணி நடைபெற்றது.

இதில் திருநங்கை பிரியா பாபு சிறப்புரையாற்றி கொடியசைத்து பேரணியை வைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று காவல்துறை பாதுகாப்புடன் பேரணி நடைபெற்றது.

First published:

Tags: Local News, Madurai