ஹோம் /மதுரை /

மதுரை வழியாக மைசூர் - தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் இயக்கம்.! 

மதுரை வழியாக மைசூர் - தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் இயக்கம்.! 

சிறப்பு கட்டண ரயில்

சிறப்பு கட்டண ரயில்

Madurai | கர்நாடகாவின் மைசூருவிலிந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள் தென்மேற்கு மண்டல ரயில்வே சார்பில் இயக்கப்படுகிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

கர்நாடகாவின் மைசூருவிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள் தென்மேற்கு மண்டல ரயில்வே சார்பில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் 4ம் தேதி, 11ம் தேதி, 18ம் தேதிகளில் மைசூருவில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு இந்த சிறப்பு ரயில் ஆனது புறப்படுகிறது. இந்த ரயில் ஆனது, மதுரை ரயில் ஆனது நள்ளிரவு 1.15 மணிக்கு வந்தடைகிறது. தூத்துக்குடி ரயில் நிலைத்துக்கு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து இந்த சிறப்பு ரயில் (வ.எண்.06254) வரும் 5ம் தேதி, 12ம் தேதி மற்றும் 19ம் தேதிகளில் சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிக்கு புறப்படுகிறது.

இதனைதத்தொடர்ந்து மாலை 5.50 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. காலை 8.30 மணிக்கு மைசூரு ரயில் நிலையம் சென்றடைகிறது.

இதையும் படிங்க : இந்த தெருவுக்குள்ள நுழைஞ்சாலே மிரண்டு போவீங்க..! மதுரை 10 தூண் சந்து சிறப்புகள்..!

இந்த ரயிலில், ஒரு 2 அடுக்கு குளுரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பார்சல் பெட்டிகளுடன் இணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டிகள் மட்டும் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில்கள், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு கன்டோண்மென்ட், பெங்களூரு, கெங்கேரி, மாண்டியா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ரயிலில் வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Karthi K
First published:

Tags: Madurai, Southern railway, Train