Home /madurai /

மதுரையில் மட்டுமே கிடைக்கும் முள்ளு முருங்கை கீரை வடை சாப்பிட்டிருக்கீங்களா? - எங்க கிடைக்கும்?

மதுரையில் மட்டுமே கிடைக்கும் முள்ளு முருங்கை கீரை வடை சாப்பிட்டிருக்கீங்களா? - எங்க கிடைக்கும்?

மதுரை

மதுரை - முருங்கை கீரை வடை

Madurai Mullu Murungai Keerai Vadai | மதுரை முனிச்சாலை, திருமலை நாயக்கர் மகால், தெப்பக்குளம் என பல பகுதிகளில் தள்ளு வண்டி கடைகளில் இந்த முள்ளு முருங்கை கீரை வடை விற்பனை நடக்கிறது,

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai
பல வகையான உணவுகளுக்கும் அதன் ருசிக்கும் பெயர் போன மதுரையில் பலரும் அறிந்திராத, ஆனால் அனைவரும் விரும்பக்கூடிய உணவு தான் முள்ளு முருங்கை கீரை வடை.
பிற ஊர்களில் அவ்வளவு எளிதில் எங்கும் இந்த கீரை வடையை நாம் கண்டிருக்க முடியாது. ஏனெனில் மதுரையில் மட்டுமே அதிகளவில்  வாழ்ந்து வரும் சௌராஷ்டிரா சமூக மக்களால் இந்த கீரை வடையானது தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

மதுரை முனிச்சாலை, திருமலை நாயக்கர் மகால், தெப்பக்குளம் என பல பகுதிகளில் தள்ளு வண்டி கடைகளில் இந்த முள்ளு முருங்கை கீரை வடை விற்பனை நடக்கிறது,

முள்ளு முருங்கை கீரை மற்றும் அரிசி மாவு கொண்டு செய்யப்படும் இந்த வடையானது மதுரை மட்டுமல்லாது வெளி மாவட்டத்தினரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டியாக உள்ளது.

இதையும் படிங்க: மதுரை விவசாயிகள் பிரதமர் நிதி உதவி பெற இதை கட்டாயம் செய்ய வேண்டும்

இது குறித்து மதுரை முனிச்சாலை பகுதியில் தள்ளு வண்டி கடை வைத்து நடத்தி வரும் சேதுராமன்  கூறுகையில், பெரும்பாலும் இந்த முள்ளு முருங்கை கீரை வடை  மதுரையில் தான் விற்கப்படுகிறது.  மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் போல இந்த கீரை வடையை மதுரை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்., அதுமட்டுமல்லாமல் உடலுக்கு  தீங்குகளை விளைவிக்கும் பலவகையான சாலையோர உணவுகளுக்கு மத்தியில் இந்த கீரை வடை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவென்றும் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மதுரைவாசிகளாக இருந்தாலும் சரி, வெளியூர் வாசிகளாக இருந்தாலும் சரி முள்ளு முருங்கை கீரை வடை அனைவரும் ருசித்து பார்க்க வேண்டிய ஒரு உணவு என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி