மதுரையில் புதிதாக பூங்காக்கள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கின்றன.
மதுரை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 202 பூங்காக்கள் உள்ளன. இதில் காந்தி அருங்காட்சியகம் அருகே உள்ள ராஜாஜி பூங்கா மற்றும் ஒருசில பூங்காக்கள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகின்றன. பிற பூங்காக்கள் அனைத்தும் முள் புதர் மண்டியும், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும் காணப்படுகின்றன.
வைகை ஆற்றங்கரையில் தற்போது புதிய பூங்காக்கள் அமைப்பதில் ஆர்வம் காட்டிவரும் மாநகராட்சி நிர்வாகம் இந்த பூங்காக்களை கருத்தில் கொள்வதில்லை.
இங்கு உள்ள பூங்காக்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு மட்டுமன்றி மாலை நேரங்களில் முதியவர்கள் அமர்ந்து இளைப்பாரவும் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் ஏற்ற இடமாக உள்ளது.
இவ்வாறு தினசரி மதுரையில் வாழும் குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள் உட்பட அனைத்து வயதினரும் அவர்களை சுற்றியுள்ள பூங்காக்களை உபயோகித்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் பூங்காக்களை முறையே பராமரிக்காமல் விட்டுவிடுவது பூங்காக்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும்.
அதுமட்டுமல்லாமல் பூங்காங்களுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்தால் அந்த பூங்காக்கள் நாளை சமூக விரோதிகளின் கூடாரமகவும், குடிமகன்களின் வீடாகவும் மாறும் அபாயம் உள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு இணையாக மதுரையிலும் சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் இளைப்பாற வைகை ஆற்றங்கரையில் பூங்காக்கள் அமைக்கும் பணி அவசியமானதாக இருந்தாலும் அதே நேரம் ஏற்கனவே உள்ள பூங்காக்களை முறைப்படி பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.