மதுரை திருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளரின் மகள் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.
மதுரை மாவட்டம், மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவர், 100 நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளராக இருந்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் தனக்கு பணி வழங்காமல் மிரட்டல் விடுத்ததாக கூறி, கடந்த ஏப்ரல் மாதம் ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இவருக்கு 5 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் நேற்று வீட்டின் அருகே உள்ள தோட்டத்து தண்ணீர் தொட்டியில் குளித்துக்கொண்டிருந்த 2-வது மகள் விஜயதர்ஷினி, 4-ஆவது மகள் சண்முகப்பிரியா ஆகிய இருவரையும் 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு கடித்தது.
இதனால் மயங்கி விழுந்த இருவரையும் மீட்ட குழந்தைகளின் தந்தை, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதில் சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜயதர்ஷினிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செய்தியாளர் : சிவக்குமார் (மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.