முகப்பு /மதுரை /

மெட்ரோ ரயில் திட்டம் மதுரைக்கு ஒத்துவருமா? என்ன சொல்றாங்க மதுரைக்காரங்க?

மெட்ரோ ரயில் திட்டம் மதுரைக்கு ஒத்துவருமா? என்ன சொல்றாங்க மதுரைக்காரங்க?

X
மெட்ரோ

மெட்ரோ ரயில்

Madurai Metro Train | மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பற்றி மதுரை மக்களின் கருத்து.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

சென்னை மெட்ரோ ரயிலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கிலோ மீட்டர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து வழங்குமாறு தமிழக அரசு கேட்டுள்ளது. தற்போது இந்த அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நிறுவனம் தேர்வான பின்னர் 75 நாட்களில் அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்டம் மதுரைக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று மதுரை மக்களிடம் கேள்விகளை முன்வைத்தோம். இந்த கேள்விகளுக்கு மதுரை மக்கள் அளித்த கலவையான பதிலையும், கருத்துக்களையும் தற்போது அறிந்து கொள்வோம்.

மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவது நல்ல திட்டமாக உள்ளது. இத்திட்டம் மதுரைக்கு வந்தால் வேலைக்கு செல்வோருக்கு சுலபமாகவும், நகரில் போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் இருக்கும். மெட்ரோ ரயில் திட்டம் வருவது நல்லது தான். ஆனால் மதுரையில் இதற்கு போதுமான இடவசதி உள்ளதா? என்று தெரியவில்லை. ஆனால் மெட்ரோ ரயில் திட்டம் மதுரைக்கு வந்தால் பயண நேரத்தை குறைக்கும் வகையில் இருக்கும். இது மக்களுக்கு பயன் தரும் வகையில் இருக்கும்.

இதையும் படிங்க : பைக், காருக்கு பெட்ரோல் போட போறீங்களா? கோடை காலத்தில் கண்டிப்பா இந்த தப்ப பண்ணாதீங்க..!

பொதுமக்கள் கருத்து :

இதுகுறித்து மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கூறுகையில், “ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை மெட்ரோ ரயில் திட்டம் மூலம் எங்களைப் போன்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிரமமாக இருக்கும். ஏனென்றால் தற்போது ஷேர் ஆட்டோ தொழில் சுமாராகவே உள்ளது. மெட்ரோ ரயில் வந்தால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்” என கவலை தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் சிலர். “மதுரைக்கு மெட்ரோ ரயில் வந்தால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கலாம். மேலும் பயண நேரத்தை குறைக்கும் வகையில் இருக்கும். மெட்ரோ திட்டத்தால் மக்கள் மிகவும் பயன்பெறுவார்கள். குறிப்பாக மாணவர்கள் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது மிகவும் ஏதுவாக இருக்கும்” என தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Madurai, Metro Rail