நீர்நிலைகளை மாசுபடுத்தும் பாலிதீன் பைகளை ஒழிக்க மஞ்சள் பை பயன்படுத்த கோரி வைகை நதி மக்கள் இயக்கம் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தது.
உலக தண்ணீர் தினமான மார்ச் 21 அன்று கலெக்டர் அலுவலகத்தில் வைகை நதி மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கூடினர். பின்பு அங்கிருந்து திருவள்ளுவர் சிலை வரை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
சமூக சேவகர் இல.அமுதன், அறிவுச்செல்வம், வைகை ராஜன், பகத் சங்கர், பாண்டியராஜன், அபுபக்கர், கண்ணன், செந்தில், பழனிவேல்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பிரச்சார இயக்கத்தில் மஞ்சள் பையின் அவசியத்தை வலியுறுத்தி பிரம்மாண்டமான மஞ்சள் ஆடை வடிவமைத்து அதை உடுத்திக்கொண்ட இயக்கத்தினர் மக்களிடையே பிரச்சாரம் செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
முதல்வர் தொடங்கி வைத்துள்ள இந்த 'மீண்டும் மஞ்சள்பை' திட்டம் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சென்று சேருவதற்காக இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை வைகை நதி மக்கள் இயக்கம் முன்னெடுத்துள்ளனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cm, Madurai, Plastic Ban, Plastic pollution