முகப்பு /மதுரை /

மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானைகளுக்கு நினைவு மண்டபம் - ஒப்பந்தபுள்ளி வெளியீடு

மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானைகளுக்கு நினைவு மண்டபம் - ஒப்பந்தபுள்ளி வெளியீடு

மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானை

மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானை

Madurai District | மதுரையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உயிரிழந்த கோவில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டிருப்பது  மதுரை மக்களிடம் பக்தர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டத்தில் உயிரிழந்த இரண்டு கோவில் யானைகளுக்கு சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் விரைவில் நினைவு மண்டபம் கட்டப்படுவதற்கான  ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருவிழா காலங்களில் சாமி முன்பாக உலா வருவதற்காக கோவில் நிர்வாகம் சார்பாக அங்கயற்கண்ணி, பார்வதி, அவ்வை ஆகிய மூன்று யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் அங்கயற்கண்ணி யானை கடந்த 2007ஆம் ஆண்டு உயிரிழந்தது.

தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி யானை மட்டுமே உள்ள நிலையில், உயிரிழந்த அங்கயற்கண்ணி யானைக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் நிர்வாகம் சார்பாக சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு ஒப்பந்த புள்ளி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க :  உயிரை பணயம் வைத்து கடலுக்குள் இறங்கி கடற்பாசிகளை சேகரிக்கும் ராமநாதபுரம் மீனவ பெண்கள்..!

அதே போல் மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்த அவ்வை யானையும் கடந்த 2012 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தது. இந்த நிலையில் கோவில் வளாகத்திற்குள் உள்ள பசு மடத்தில் அவ்வை யானைக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்காக திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பாக சுமார் 30 லட்சத்து 67 ஆயிரத்து 56 ரூபாய்க்கு ஒப்பந்த புள்ளி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த பணிகளை 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மதுரையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உயிரிழந்த கோவில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டிருப்பது  மதுரை மக்களிடம் பக்தர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

First published:

Tags: Local News, Madurai