ஹோம் /மதுரை /

தீபாவளிக்கு வைர கிரீடத்துடன் தங்க கவசத்தில் மதுரை மீனாட்சியம்மன் காட்சி.!

தீபாவளிக்கு வைர கிரீடத்துடன் தங்க கவசத்தில் மதுரை மீனாட்சியம்மன் காட்சி.!

மதுரை மீனாட்சியம்மன்

மதுரை மீனாட்சியம்மன்

Madurai | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மனுக்கு வைர கிரீடத்துடன் தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. நாளை பக்தர்களுக்கு இந்த கோலத்தில் அம்மன் காட்சியளிப்பார் என்று கோவில் நிர்வாகம் சார்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மனுக்கு வைர கிரீடத்துடன் தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. நாளை பக்தர்களுக்கு இந்த கோலத்தில் அம்மன் காட்சியளிப்பார் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி நாளை காலை, மாலை என இரு வேளைகளிலும் மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்கக்கவசமும், சுந்தரேசுவரர் சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு தீபாவளி சிறப்பு தரிசனம் நடைபெறும். மேலும் நாளை மறுநாள் (25ம் தேதி) முதல் 30ம் தேதி வரை கோவிலில் ஐப்பசி மாத கோலாட்ட திருவிழா தொடங்குகிறது.

இதையொட்டி நாளை மறுநாள் (25ம் தேதி) முதல் 28ம் தேதி வரை மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் ஆடி வீதியில் சுற்றி வந்த பிறகு மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்தி பின்பு கொலுச்சாவடி வந்து சேருவார். 29ம் தேதி மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் வௌ்ளி கோ ரதத்தில் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் வீதி உலா நடைபெறும். ஐப்பசி விழாவின் 6ம் நாளான 30ம் தேதி மாலை 6 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதியில் புறப்பாடு நடைபெறும்.

இதையும் படிங்க : தீபாவளி பலகாரங்கள் செய்து கலக்கும் சிறைக்கைதிகள்... களைகட்டும் மதுரை ஜெயில் பஜார்..

இதனைத்தொடர்ந்து கோவிலில் பவித்திர உற்சவம் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. இந்த உற்சவத்தில் சந்திரசேகரர், சுவாமி சன்னதி 2ம் பிரகாரம் வலம் வந்து சேத்தியாவார். 8ம் தேதி உச்சி காலத்தில் சுந்தரேசுவரருக்கு ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறும்.

மீனாட்சி அம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை மறுநாள் (25ம் தேதி) முதல் 30ம் தேதி வரை நடைபெறும். 31ம் தேதி காலை 7 மணிக்கு கூடல்குமாரர் சன்னதியில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி வௌ்ளிக்கவசம் மற்றும் பாவாடை சாத்துப்படியும் விசேஷ அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனையும் நடைபெறும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஐப்பசி மாத திருவிழாவையொட்டி நாளை (24ம் தேதி) முதல் 31ம் தேதி வரை மீனாட்சி அம்மன் கோவிலில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகியவை நடைபெறாது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாச்சலம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Deepavali, Local News, Madurai