முகப்பு /மதுரை /

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு..! - ஏன் தெரியுமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு..! - ஏன் தெரியுமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

Madurai Meenatchi Amman Temple | மீனாட்சி அம்மன் கோவில் ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் மற்றும் ஆடி வீதிகளில் மட்டும் வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள என திருக்கோயில் துணை ஆணையர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் மிகவும் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்று தமிழ் மாதமான சித்திரையில்நடைபெறும் ‘சித்திரைதிருவிழா’. இதற்கு அடுத்தபடியாக மதுரையில் புகழ்பெற்ற திருவிழாவாக விளங்குவதுதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழா ஆகும்.

நடப்பாண்டில்திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வரும் ஏப்ரல் 8ம் தேதியன்று நடைபெற உள்ளது.அன்றைய தினம் அதிகாலை 04.00 மணியளவில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அங்கு திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருளி மீண்டும் இரவு திருப்பரங்குன்றம் திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி நள்ளிரவு மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் மீனாட்சி அம்மன் திருக்கோயில் வந்து சேர்வார்கள்.

எனவே, அன்றைய தினம் அதிகாலை 04.00 மணி அளவில் அருள்மிகு அம்மன், அருள்மிகு சுவாமி புறப்பாடாகி சென்று திரும்ப நள்ளிரவு வந்து சேரும் வரை இத்திருக்கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

மீனாட்சி அம்மன் கோவில்

மேலும் மீனாட்சி அம்மன் கோவில் ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் மற்றும் ஆடி வீதிகளில் மட்டும் வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள என திருக்கோயில் துணை ஆணையர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Madurai