மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து பல வெளிமாநில கோயில்களின் திருவிழாவிற்க்கு பட்டு வஸ்திரங்கள் அனுப்பப்பட உள்ளன.
உத்தர பிரதேச காசி விஸ்வநாதர் கோயில், ஆந்திரா சித்தூர் கால ஹஸ்தி கோயில், கேரளா திரிச்சூர் வடக்குநாதர் கோயில், கர்நாடகா முறுதீஸ்வரர் கோயில் உட்பட பல வெளிமாநில கோயில் திருவிழாக்களுக்கு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் அனுப்பப்பட உள்ளன.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் போது ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி அன்று திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சார்பில் மாலை அணிவிக்கப்படுகிறது. அதேபோல் திருச்சி திருவரங்கம் கோயிலுக்கும் மாலை அனுப்பப்படுகிறது.
இந்த நிகழ்வுகளானது பாரம்பரியமாக பல ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வாகும். ஆகவே இந்நிகழ்வை போன்று பிற மாநில கோயில்களுடன் நல்லுறவு ஏற்படுத்தும் வண்ணம் இந்த முறையை செயல்படுத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் பேரில் மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் காசி விஸ்வநாதர் ஆலயம், காளஹஸ்தி, திரிச்சூர் உட்பட பல கோயில்களுக்கு பட்டு வஸ்திரம் வழங்கவும் அதற்கு பதிலாக அந்த கோயில்கள் சார்பில் பட்டு வஸ்துரம் மற்றும் மாலை வழங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முதற்கட்டமாக காளஹஸ்தி, திரிச்சூர் கோயில்களில் நிர்வாகத்திடம் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகிகள் பேசி உள்ளனர்.
அதேபோல் திருப்பதி வெங்கடாசலபதி கோயில், குருவாயூர் உட்பட வெளிமாநில கோயில்களுக்கு திருச்சி திருவரங்கம் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரம் மற்றும் பூமாலை அனுப்பப்பட உள்ளது.
இதன்மூலம் வெளிமாநிலங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே ஒரு இணக்கமான நல்லுறவு ஏற்படும் என அறநிலையத்துறை கருதுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.