முகப்பு /மதுரை /

பழமை மாறாமல் புனரமைக்கப்படும் மதுரை காந்தி மியூசியம்..

பழமை மாறாமல் புனரமைக்கப்படும் மதுரை காந்தி மியூசியம்..

X
மதுரை

மதுரை காந்தி மியூசியம்

Madurai Gandhi Museum | மதுரையின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய காந்தி மியூசியம் தற்பொழுது உண்மை தன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகின்றது..

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரையின் சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்க கூடிய இடம் தான் மதுரை காந்தி மியூசியம்.    1860களில் மதுரை மாநகரை ஆட்சி புரிந்த ராணி மங்கம்மாள் கோடைகாலத்தில் ஓய்வெடுக்கவும் மதுரையை ஆட்சி புரியும் இடமாகவும் இருந்து வந்தது பின்பு ஆங்கிலேயர்களின் காலத்தில் ஆங்கிலேய கலெக்டர்கள், நீதிபதிகள் தங்கும் இடமாக இருந்தது.

ஜனவரி 30 ,1948 ல் காந்தி கொல்லப்பட்ட நிலையில் அவர் நினைவை போற்றும் விதமாக அரண்மனையாக இருந்ததை அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் காந்தி பயன்படுத்திய அசல் பொருட்கள், காந்தியின் ரத்தக்கரை படிந்த மேலாடையும் உள்ளது இதனை காண்பதற்கு எனது பொதுமக்கள் வெளி மாநில மக்கள் வெளிநாட்டவர்கள் என சுற்றுலா பயணிகள் வந்த வண்ணமாக இருக்கின்றார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நிலையில் காந்தி மியூசியம் பழமையான கட்டிடம் என்பதால் இக்கட்டத்தை புனரமைக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. கட்டிடத்தின் உண்மை தன்மை மாறாமல் கை வேலைபாடுகள் கொண்டே மியூசியத்தின் வெளித்தோற்றம் புனரமைக்கப்பட்ட வருகின்றது.

First published:

Tags: Gandhi, Local News, Madurai