ஹோம் /மதுரை /

மதுரையில் காணும் பொங்கலை முன்னிட்டு திருவிழா போல் ஜொலித்த மாரியம்மன் தெப்பக்குளம்

மதுரையில் காணும் பொங்கலை முன்னிட்டு திருவிழா போல் ஜொலித்த மாரியம்மன் தெப்பக்குளம்

X
தெப்பக்குளத்தில்

தெப்பக்குளத்தில் குவிந்த மக்கள்

Madurai | மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பொதுவாகவே இரவு நேரங்களில் ஜே ஜே என்று இருக்கும்.

பொங்கல் பண்டிகையின் நான்காவது நாளான இன்று காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தநிலையில்மதுரை மாரியம்மன் தெப்பக் குளம் திருவிழா போல் காட்சி அளிக்கின்றது. சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் காணும் பொங்கலை முன்னிட்டு குழந்தைகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாட இவ்விடத்தில் கூடியுள்ளார்கள.

தெப்பக் குளத்தில் குவிந்த மக்கள்

மினி பீச் என்று சொல்லக்கூடிய மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் சூப்கடை, பானி பூரி கடை, மூங்கில் பிரியாணி, வெரைட்டி ஜூஸ் கடை, பொட்டுக்கடை, டிபன் சென்ட,ர் பாணி வாலா, ஐஸ்கிரீம்,ஸ்பைசி புட் போன்ற உணவு கடைகளும் குழந்தைகளுக்கு கண் கவரும் வண்ணம் பால்ஸ் கேம், ஜம்பிங், பவுன்ஸ் டாய்ஸ் ஷாப், ராட்டினங்கள் போன்ற விளையாட்டு தளங்களும் தெப்பக்குளத்தில் திறக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் அரும் பணிகள் அணிவகுப்பு புகைப்படக்கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவையும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுபிடித்தனர.

செய்தியாளர்: யுவதிகா, மதுரை.

First published:

Tags: Local News, Madurai