முகப்பு /மதுரை /

மதுரையில் சாக்கடை கால்வாயால் அவதியுறும் மக்கள்..!

மதுரையில் சாக்கடை கால்வாயால் அவதியுறும் மக்கள்..!

X
மதுரை

மதுரை சௌபாக்கியா விநாயகர் தெரு பகுதியில் நீண்ட ஆண்டுகளாக இருக்கும் சாக்கடை அடைப்

Madurai News | வண்டியூர் கண்மாயில் இருந்து வரும் தண்ணீர் இந்த பகுதியில் உள்ள கால்வாயின் வழியாகத்தான் ஓடியதாகவும், காலப்போக்கில் இந்த கால்வாய் சாக்கடை கால்வாயாக மாறிவிட்டது என்றும் கூறுகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை அண்ணா நகர் அருகே37வது வார்டுக்கு உட்பட்ட தாசில்தார் நகர் பகுதியான சௌபாக்கிய விநாயகர் தெருவில் வசித்து வரும் மக்கள் பல ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் மற்றும் சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றார்கள். மேலும் வண்டியூர்கண்மாயில் இருந்து வரும் தண்ணீர் இந்தப் பகுதியில் உள்ள கால்வாயின் வழியாகத்தான் ஓடியதாகவும் காலப்போக்கில் இந்த கால்வாய் சாக்கடை கால்வாயாக மாறிவிட்டது என்றும் கூறுகின்றனர்.

தற்பொழுது இந்த கால்வாய் முழுவதும் சாக்கடை நிரம்பி வழிவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும் இரவு நேரங்களில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் மழைக்காலங்களில் சாக்கடை தண்ணீரும் மழை தண்ணீரும் கலந்து வீடுகளில் நுழைவதாகவும் கொசுக்களினால் பெரியவர்கள் முதற்கொண்டு சிறியவர்கள் வரை நோய்கள் பரவுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையாக தெரிவிக்கின்றார்கள்.

50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கக்கூடிய இப்பகுதியில் சாக்கடை கால்வாய் மூடப்படாமல் சுமார் பத்து வருடங்களாக சாக்கடை தேங்கி நிற்கின்றது. இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது குறித்து அங்குள்ள பொதுமக்கள் கூறும் பொழுது, நாங்கள் இப்பகுதியில் கடந்த 20 வருடமாக இருக்கின்றோம். ஆட்சிகள் தான் மாறுகின்றன.  ஆனால், இப்பகுதியில் உள்ள பிரச்னை மாறியதாகவே இல்லை. எங்கள் தெரு முழுவதும் சாக்கடை தேங்கி துர்நாற்றம் வீசுகின்றது. இரவு நேரங்களில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. மேலும், மழைக்காலங்களில் இங்கு உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி இப்பகுதியில் செல்ல முடியாத நிலையாக உள்ளது.

இதற்காக நாங்கள் அனைவரும் இணைந்து பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சாக்கடையை சரி செய்து கால்வாய் முழுவதையும் மூடி சாலைகளை சீர் செய்து தர வேண்டும் என்று எங்களின் கோரிக்கையாக உள்ளது என கூறினர்.

First published:

Tags: Local News, Madurai