Home /madurai /

Madurai | வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மூன்றாவது ஐ.டி பூங்கா வேண்டும் - மதுரை இளைஞர்கள் கோரிக்கை

Madurai | வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மூன்றாவது ஐ.டி பூங்கா வேண்டும் - மதுரை இளைஞர்கள் கோரிக்கை

மதுரை எல்காட் ஐ.டி பார்க்

மதுரை எல்காட் ஐ.டி பார்க்

Madurai | சென்னை, கோவைக்கு இணையாக மதுரையில் ஐ.டி பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்று அம்மாவட்ட இளைஞர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகராகவும், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் திகழும் மதுரை மாநகருக்கு கலாச்சாரம், அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து சார்ந்து பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையிலும் தொழில் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் மதுரை மக்களுக்கும், இளைஞர்களும் எட்டாகணியாகவே உள்ளது.

மதுரையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஐ.டி நிறுவனங்கள் இல்லாத சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில், மதுரை இலந்தைக்குளம், வடபழஞ்சியில் எல்காட் ஐ.டி பூங்காக்கள் உள்ளன. இங்கு எச்.சி.எல் உட்பட பல முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் செயல்படுகின்றன. தற்போது வடபழஞ்சி என்ற பகுதியில் புதிய நிறுவனங்களுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சில நிறுவனங்கள் கட்டுமானத்தை துவக்கி விட்டன.

மதுரை எச்.சி.எல்


இந்நிலையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு மதுரையின் வளர்ச்சிக்கு மூன்றாவதாக ஒரு ஐ.டி பூங்கா தேவை என பல மதுரை இளைஞர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து டிவிட்டர், பேஸ்புக்கில் 'ஹேஷ்டேக்கை டிரண்டிங் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கோவையில் எல்காட் உட்பட தனியார் ஐ.டி பூங்காக்கள் பல துவங்கி சிறப்பாக செயல்படுகின்றன. சென்னை போல் கோவையும் ஐ.டி துறையில் அசுர வேகத்தில் முன்னேறுகிறது. மதுரை துாங்கா நகரம், கோயில் நகரம் என்ற பெயரோடு இருக்கிறதே தவிர, ஐ.டி துறையில் விரைந்த முன்னேற்றம் காணாமல் உள்ளது.

இதுகுறித்து பேசிய இளைஞர்கள், ‘சென்னை, கோவை போல் மதுரையில் பெரியளவில் ஐ.டி நிறுவனங்கள் செயல்படும் வகையில் டைடல் பார்க் அமைக்க வேண்டும். மதுரையில் உள்ள கல்வி நிறுவனங்கள் உட்பட பிற தனியார் நிறுவனங்கள் ஐ.டி பூங்காவில் முதலீடு செய்யலாம். மதுரைக்கு அறிவிக்கும் எய்ம்ஸ் உள்ளிட்ட திட்டங்கள் பலவும் அறிவிப்பாகவே இருப்பது வேதனை அளிப்பதாகவும், இன்றைய காலத்திலும் மதுரையை பூர்வீகமாக கொண்டு, மதுரையில் படித்து வளரும் இளைஞர்கள் தங்கள் வேலைவாய்ப்புக்காக சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களை தேடி செல்ல வேண்டிய நிலை தான் உள்ளது. எனவே மதுரையை வாயால் புகழ்வது மட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சிக்கும், இளைஞர்கள் முன்னேறுவதற்கும் அரசாங்கம் வழிவகை செய்யவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி