ஒவ்வொரு ஆண்டும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்ட வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் 16 இல் இருந்து 18 மணி நேரம் ஆக வேலை பார்த்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை கடந்து வாங்கிய உரிமை தான் சர்வதேச தொழிலாளர்கள் தினம்.
அந்த வகையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள உழைப்பாளர்கள் கூறுவது, என்னுடைய பெயர் தினேஷ் குமார் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு வருடங்களாக ஆட்டோ ஓட்டுகின்றோம். சித்திரைத் திருவிழாவோடு உழைப்பாளர்கள் தினம் கொண்டாடுவது மதுரை மக்கள்தான் இதை நாங்கள் சிறப்பாக கொண்டாடுவோம் அனைவருக்கும் சர்வதேச தொழிலாளர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து பேசிய அவர், இந்த ஆட்டோ ஓட்டுவதில் எங்களுக்கு மிகுந்த சிரமம் என்னவென்றால் ஆன்லைன் அதாவது ஓலா ரேபிடோ போன்ற நிறுவனங்கள் மூலம் ஆட்டோ ஓட்டுவதினால் எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. நாங்களும் அதே விலைக்கு ஏற்ற மாதிரி தான் ஓட்டுகிறோம் ஆனால் மக்கள் அனைவரும் ஆன்லைனில் நோக்கி ஓடுகின்றார்கள் அவசர காலத்தில் நாங்கள் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றோம் அந்த வேலையில் ஆன்லைனை நம்பி இருந்தால் என்னவாகும்.
பல்வேறு மாவட்டங்களில் இந்த ஆன்லைன் ஆப் தடை செய்து விட்டார்கள் ஆனால் முழுவதுமாக தடை செய்யாததால் சற்று சிரமமாக உள்ளது இதனை சரி செய்து ஆன்லைன் ஆப்பை ஒழித்தால் நன்றாக இருக்கும். தொழிலாளர் தினம் அன்று விடுமுறை ஆனால் நாங்கள் விடுமுறை எடுத்தால் என்னவாகும் மக்கள் கடுமையாக அவதிப்படுவார்கள் ஆகையால் நாங்கள் விடுமுறை இல்லாமல் நான் கணக்காக உழைத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.
என் பெயர் ராஜா நான் மெக்கானிக் டிரைவராக கடந்த 10 வருடங்களாக வேலை பார்த்து வருகின்றேன். இந்த டிரைவர் தொழில் என்பது மிகவும் மோசமான தொழிலில் மிலிட்டரியை காட்டிலும் மோசமான தொழிலாக உள்ளது இருந்தாலும் நாங்கள் பள்ளி வாகனத்தில் இருந்து காவல்துறைக்கு வரைக்கும் அவசர காலங்களிலும் டிரைவர் வேலை செய்த வருகின்றோம் இது போக வெளியூர் வெளி மாவட்டங்களுக்கு சென்று நாள் முழுவதும் சரக்குகளை இறக்கி உழைத்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் அதற்கு காவல்துறை உங்களுக்கு மரியாதை தருவது இல்லை. ஒரு டோல் கேட்டில் அவசரமாக வண்டியை நிறுத்தினால் காவல்துறை கடுமையாக நடந்து கொள்கின்றார்கள் இவைதான் சற்று சிரமமாக உள்ளது. மற்றபடி பார்த்தால் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றோம் ஒரு நாள் விடுமுறை எடுத்தால் கூட அன்றைய வேலைகள் நின்றுவிடும். ஆகையால் எங்களுக்கு விடுப்பு இல்லாமல் நாள் கணக்காவும் மணி கணக்காகவும் உழைத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.
கடந்த 25 வருடங்களாக இரும்பு தொழில் பார்த்து வருகின்றோம் எட்டு மணி நேர வேலையாக இருந்ததை 12 மணி நேரமாக ஊதியம் இல்லாமல் உயர்த்தியது கண்டிக்கக் கூறியது. ஏற்கனவே எட்டு மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரைக்கும் உழைத்துக் கொண்டிருக்கின்றோம் இது போக 12 மணி நேரம் என்றால்... உழைக்கும் நாங்கள் முதலாளிக்கு தான் நன்மை சேர்கின்றது ஆனால் குழப்பக்கூடிய உழைப்பாளிகளுக்கு எவ்வித பயனும் இல்லாமல் தான் இருக்கின்றது இதற்கு தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தான் இருந்தது. நேரத்திற்கு ஏற்றார் போல் வேலை உழைப்பிற்கு ஏற்றார் போல் ஊதியம் கிடைக்க வேண்டும் நிரந்தர வேலை என்ற எதிர்பார்ப்பு.
என் பெயர் ராஜா கடந்த 10 வருடங்களாக கொள்ளு தச்சு சுத்தியல் அடித்தல் போன்ற வேலைகளை செய்து வருகின்றோம். இந்த வேலையில் பல்வேறு இடங்களில் இருந்தாலும் இந்த வேலையை பார்க்க வேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது. சில காலங்களில் ஊதியம் இல்லாமல் இருக்கலாம் குடித்துக்கொண்டு வருபவர்கள் குடும்பங்களுக்காக உழைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில்
என்னதான் சர்வதேச தொழிலாளர்கள் தினம் என்று இருந்தாலும் உழைப்பாளிகள் பொறுப்பிற்காகவும் தனது குடும்பத்திற்காகவும் நாள் கணக்காக உழைத்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, May day