முகப்பு /மதுரை /

தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகளுக்கு மல்டிபிள் இன்டெலிஜென்ட் கல்வி.. முன்னெடுக்கும் மதுரை கௌரி..

தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகளுக்கு மல்டிபிள் இன்டெலிஜென்ட் கல்வி.. முன்னெடுக்கும் மதுரை கௌரி..

X
தூய்மைப்பணியாளர்களின்

தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகளுக்கு மல்டிபிள் இன்டெலிஜென்ட் கல்வி

Madurai District News | மதுரையில் தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகள் சமூகத்தில் முன்னேறும் வகையில் எல்லோ பேக் பவுண்டேஷனை வழிநடத்தும் கௌரி மல்டிபிள் இன்டெலிஜென்ட் என்ற கல்விமுறையை குழந்தைகளுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளர்கள் வசிக்கக்கூடிய கோமஸ் பாளையத்தில், தூய்மை பணியாளர் குழந்தைகள் சமூகத்தில் முன்னேறவேண்டுமென்று லைப் ஸ்கில், எஜுகேஷன் இன்டெலிஜென்ட் என்ற கல்வி முறையை எல்லோ பேக் பவுண்டேஷன் டைரக்டர் கௌரி இலவசமாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்.

இதுகுறித்து அங்கு பணிபுரியும் முகமது கனி கூறுகையில், “லைப் ஸ்கில் மற்றும் எஜுகேஷன் இன்டெலிஜென்ட் என்ற கல்வி முறையை நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம். 40 நாட்கள் நடக்கும் இந்த கல்வி முறையில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் என்னென்ன திறமைகள் உள்ளது என்பது அவர்களே புரிந்துகொள்ளும் வகையில் சில ஆக்டிவிட்டி மூலமாக இந்த வகுப்புகள் நடைபெறும்.

இதன் மூலமாக வருங்காலங்களில் குழந்தைகளுக்கு என்ன தேவை அல்லது அவர்களுடைய வழகளை அவர்களே புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் வருங்காலங்களில் செயல்படுவதற்கும், சமூகத்தில் முன்னேறும் வகையிலும், இந்த சமூகத்தின் மத்தியில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று குழந்தைகளை புரிந்துகொண்டு செயல்படுவதற்கு இந்த வகுப்புகள் பயன்படும் வகையில் இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க : திருச்சி ரயில் நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு..!

 இதுகுறித்து அங்கு பயிற்சிபெறும் குழந்தைகள் கூறும்போது, “முதலில் எனக்கு ஒழுங்காக பேசத் தெரியாமல் இருந்தது. ஆனால் எஜுகேஷன் இன்டெலிஜென்ட் வகுப்பை நான் அட்டென்ட் செய்தபோது என்னால் ஒழுங்காக பேச முடிந்தது. இந்த வகுப்பில் நான் கலந்துகொண்ட பிறகு தான் எனக்கு என்ன திறமை உள்ளது என்று நானே அறிந்துகொண்டேன். அதற்கு உதவியாக இருந்தது இந்த வகுப்பு தான்” என்று கூறினர்.

First published:

Tags: Local News, Madurai