முகப்பு /மதுரை /

Madurai Weather Update : மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம்..

Madurai Weather Update : மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம்..

X
மதுரையில்

மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில்

Madurai Weather Update : மதுரையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கத்திரி வெயில் முடிவடைந்த நிலையிலும் மதுரையில் கடந்த ஒரு வாரமாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுவாகவே 37 - 38 டிகிரி செல்சியஸ் அளவில் தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும், சுமார் 11 மணி அளவில் இருந்து வெளியவே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மதுரையில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரித்து அனல் காற்று வீசுவதினால் வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில்

எந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் என்று பார்த்தால் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் தண்ணீர் நிரம்பி இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தண்ணீர் வற்ற ஆரம்பித்துள்ளது. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் வாட்டி வதைக்கிறது.

இதன் காரணமாக வரும் (ஜூன் 10) சனிக்கிழமை வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார்போல் மதுரையில் காலை நேரத்தில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரத்தில் குளிர்ந்து காற்று வீசி அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Madurai, Weather News in Tamil