முகப்பு /மதுரை /

மதுரையில் திடீரென்று சூழ்ந்த கருமேகங்கள்.. சாரல் மழை பெய்ததால் மக்கள் குஷி..

மதுரையில் திடீரென்று சூழ்ந்த கருமேகங்கள்.. சாரல் மழை பெய்ததால் மக்கள் குஷி..

X
மதுரை

மதுரை நகரில் திடீர் கோடை மழை

Madurai Rains | மதுரையில் உள்ள பல்வேறு பகுதிகளில் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் சித்திரை மாதத்திற்கு முன்பாக, பங்குனி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. இதனால் மக்கள் வெளியே சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில். தமிழகத்தில் சில பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, மதுரையில் திடீரென்று கரு மேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக சிம்மக்கல் கோரிப்பாளையம் ஆரப்பாளையம் அண்ணா நகர், வண்டியூர் போன்ற பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

இடம் : மதிச்சியம், மதுரை

சுமார் அரை மணி நேரமாக பெய்த இந்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டி குளம் போல் காட்சியளித்தது. வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென்று அரை மணி நேரமாக பெய்த இந்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மதுரை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Heavy Rains, Local News, Madurai