ஹோம் /மதுரை /

படகு சவாரி, மிதக்கும் உணவகம்.. மதுரையின் புதிய சுற்றுலா தலமாக உருவெடுக்கும் வண்டியூர் கண்மாய்..

படகு சவாரி, மிதக்கும் உணவகம்.. மதுரையின் புதிய சுற்றுலா தலமாக உருவெடுக்கும் வண்டியூர் கண்மாய்..

மதுரை

மதுரை வண்டியூர் கண்மாய்..

Madurai Vandiyur Park | மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வண்டியூர் கண்மாயை சுற்றி அமையவிருக்கும் இயற்கை பூங்கா

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் பல நவீன திட்டங்கள் நிறைவேற்றப்படுவது நாம் அனைவருமே அறிந்த ஒன்று தான்

அந்த வகையில் தூங்கா நகரம், பாண்டிய நாடு என்று பல பெயர்களுடன் அழைக்கப்பட கூடிய மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை வண்டியூர் கண்மாய்யை சுற்றி 63 கோடி ரூபாய் செலவில் சுற்றுசூழல் பூங்கா, டென்னிஸ் அரங்கம், மிதக்கும் உணவகம் உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

கோவை வாலாங்குளம் ஏரியில் ஏற்கனவே சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதை போலவே  உருவாகவிருக்கும் வண்டியூர் பூங்கா மதுரை மக்களின் கனவு திட்டங்களில் ஒன்றாக இருந்தது...

இந்த திட்டத்தின் கீழ் மதுரை வண்டியூர் கண்மாயை சுற்றிலும் இயற்கை பூங்கா, டென்னிஸ் கோர்ட், பிற விளையாட்டு தளங்கள், படகு சவாரி, மிதக்கும் உணவகம் உள்ளிட்ட விஷயங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

மேலும் படிக்க:  திருச்சி பொன்மலையில் உருவாக்கப்பட்ட ஊட்டி மலைப்பாதை ரயில் என்ஜின் - சிறப்புகள் என்ன?

எனவே அரசின் இந்த அறிவிப்பு குறித்து வண்டியூர் பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மற்றும் வியாபாரிகளிடம் நாம் கேட்ட பொழுது அவர்கள் இததிட்டம் அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தனர், அங்குள்ள கரும்பு சாறு மற்றும் இளநீர் வியாபாரிகள் இதன் மூலம் வியாபாரம் அதிகமாகி அதன் மூலம் தங்களுக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மெய் சிலிர்த்தனர்.

மேலும் படிக்க:  புதுக்கோட்டையில் உள்ள 10 முக்கிய சுற்றுலா தலங்கள்

அரசின் இந்த அறிவிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பூங்காவை கூடிய விரைவில் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு எடுத்து வர வேண்டும் என்பதே வண்டியூர் மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மதுரை மக்களின் ஆசையாகவும் உள்ளது..

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Madurai, Smart City