ஹோம் /மதுரை /

உசிலை : கஞ்சா பதுக்கிய பள்ளி மாணவர் கைது - போலீஸ் அதிரடி

உசிலை : கஞ்சா பதுக்கிய பள்ளி மாணவர் கைது - போலீஸ் அதிரடி

உசிலை : கஞ்சா பதுக்கிய பள்ளி மாணவர் கைது - போலீஸ் அதிரடி

உசிலை : கஞ்சா பதுக்கிய பள்ளி மாணவர் கைது - போலீஸ் அதிரடி

மதுரை மாவட்டத்தில் கஞ்சா, போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

துரை மாவட்டத்தில் கஞ்சா, போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், உசிலம்பட்டி நகர் காவல்நிலைய சார்பு ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின்படி உசிலம்பட்டி பகுதியில் ரோந்து சென்று வந்தார். அப்போது, உசிலம்பட்டி பங்களாமேடு - பாண்டிகோவில் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் குமார் , அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பாக்கெட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கையும், களவுமாகப் பிடிபட்ட குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், உசிலம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் குமார் 12 ஆம் வகுப்பு படித்து வருவது தெரிய வந்துள்ளது.

பள்ளி மாணவர்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. பள்ளி மாணவர்களின் முழுக் கவனமும் அவர்கள் படிப்பின் மீதே இருக்க வேண்டும் என்றும் எஸ்.பி கூறியுள்ளார்.

மேலும், இதுபோன்று பள்ளிச் சிறுவர்களை போதைப்பொருள் விற்பனை செய்ய யாரேனும் வற்புறுத்தினாலோ, ஈடுபடத் தூண்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை

First published:

Tags: Madurai, School, Student, Usilampatti