Home /madurai /

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் இவைதான்..

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் இவைதான்..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Samayanallur, India
    மதுரை மாவட்டத்தில் சமயநல்லூா் மின்கோட்டம் கொண்டையம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக் கிழமை) 8 ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் சமயநல்லூா் மின்கோட்டம் கொண்டையம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆகையால், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மதுரை மாவட்டத்தில் சமயநல்லூா் மின்கோட்டம் கொண்டையம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ச.ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    கொண்டையம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, சின்னஇலந்தைக்குளம்,
    நடுப்பட்டி, கீழக்கரை, குட்டி மேய்க்கிப்பட்டி, எல்லையூா், ராமராஜபுரம், கூழாண்டிப்பட்டி,செம்மினிப்பட்டி, குட்லா ட் டம்பட்டி, அங்கப்பன்கோட்டம், சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி