ஹோம் /மதுரை /

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Madurai power cut | மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Samayanallur, India

மதுரை மாவட்டம் சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் உள்ள பெப்சி பீடர் மற்றும் வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் உள்ள பெப்சி பீடர் மற்றும் வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் உள்ள தெத்தூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: பரவை, பேங்க் காலனி, ஆகாஷ் கிளப், சரவணா நகர், சந்தோஷ் நகர், வித்யாவாகினி அபார்ட்மெண்ட், எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கோட்டை, சமத்துவபுரம், தடாகநாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். இதேபோன்று மதுரை அரசரடி துணைமின் நிலையத்தில் உள்ள கூடல் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொன்னவாயன் சாலை, சிங்கம்பிடாரி கோவில் தெரு, இந்திரா நகர், மேல மற்றும் கீழ வைத்தியநாதபுரம், மருதுபாண்டியர் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai