Home /madurai /

மதுரையில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மதுரையில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மதுரை மாவட்டம் கன்னிவாடி மூலச்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (புதன்கிழமை) 17ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    மதுரை மாவட்டம் கன்னிவாடி மூலச்சத்திரத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 முதல் மதியம் 12 மணி வரை கன்னிவாடி மூலச்சத்திரம் மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கன்னிவாடி மூலச்சத்திரம், பலக்னுாத்து, சேம்பர் சாலை, ஹாலோபிளாக் பகுதி, குடிநீர் வடிகால் வாரிய பிளாக் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி