ஹோம் /மதுரை /

மதுரையில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு

மதுரையில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நேற்று புதிதாக 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 18 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  கொரோனா தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை குறைந்து காணப்பட்டது. கடந்த மாதம் முதல் கொரோனா மீண்டும் அதிகரிக்க துவங்கியது. பின் கொரேனா நோய் பாதிப்பு குறையவும் துவங்கியது.

  இப்படி அதிகரிப்பும் குறைவும் இருந்த போதிலும், கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க அரசு அறிவுறுத்திவருகின்றன.

  தற்போது, தமிழகத்தில் ஆங்காங்கே கொரோனா தொற்று காணப்படுகிறது. மதுரையில் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

  நேற்று புதிதாக 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 18 பேர் நகர பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். நேற்று புதிதாக 39 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர். நேற்று புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Madurai