முகப்பு /மதுரை /

மதுரை மக்களே தயாரா..! திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தயாராகும் திருத்தேர்!

மதுரை மக்களே தயாரா..! திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தயாராகும் திருத்தேர்!

X
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தயாராகும் திருத்தேர்

Madurai News : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஏப்ரல் 9ம் தேரோட்டம் நடைபெறவுள்ள நிலையில், திருத்தேர் தயாராகி வருகிறது.

  • Last Updated :
  • Madurai, India

கோவில் நகரம் என்று சொல்லக்கூடிய மதுரை மாநகரில் சித்திரை திருவிழா என்பது பெயர்போனது. அதற்கு அடுத்தபடியாக பங்குனி மாதத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருவிழா ஆகும். இந்த திருவிழாவும் ஒவ்வொரு ஆண்டும் வெகு உணர்ச்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் வருகின்ற ஏழாம் தேதி பட்டாபிஷேகமும் எட்டாம் தேதி திருக்கல்யாணமும் ஒன்பதாம் தேதி திருப்பரங்குன்றம் திரு தேரோட்டமும் நடைபெறுகின்றது.

திருவிழாவின் ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில்,திருப்பரங்குன்றம் திருத்தேரை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் திருத்தேரோட்டம் அன்று இத்திருதேர் திருப்பரங்குன்றத்தை சுற்றி வளம் வரும் மற்ற நாட்களில் ஒரே பகுதியில் நிறுத்தி வைக்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரை சுத்தம் செய்யும் பணியும் பாலிஷ் அடிக்கும் பணியும் சக்கரங்கள் மாற்றப்படும் பணியும் நடைபெற்று தற்போது தேர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

First published:

Tags: Local News, Madurai