முகப்பு /செய்தி /மதுரை / விபத்தால் படுத்த படுக்கையான மாணவி... ஆசிரியர்கள் விதைத்த தன்னம்பிக்கை... பள்ளியில் 3ம் இடம் பிடித்து சாதனை..!

விபத்தால் படுத்த படுக்கையான மாணவி... ஆசிரியர்கள் விதைத்த தன்னம்பிக்கை... பள்ளியில் 3ம் இடம் பிடித்து சாதனை..!

திருமங்கலம் மாணவி

திருமங்கலம் மாணவி

Madurai student | மதுரை திருமங்கலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கை, கால் முறிந்த நிலையில், ஆசிரியர்கள் உதவியுடன் பொதுத்தேர்வு எழுதினார்.

  • Last Updated :
  • Thirumangalam (Tirumangalam), India

திருமங்கலத்தில் கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவி, ஆசிரியர்கள் உதவியுடன் பொதுத்தேர்வு எழுதி பள்ளியிலேயே மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் - தேவி தம்பதியினரின் மூத்த மகள் உமா மகேஸ்வரி 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் உறவினர் வீட்டின் மாடிப்படியில் இறங்கி வந்த போது வழுக்கி கீழே விழுந்ததில் கை, கால்கள், இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பிறகு வீட்டில் படுத்த படுக்கையாகவே இருந்ததால் இரண்டு மாதத்திற்கு மேலாக பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே அரையாண்டு தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி உமா மகேஸ்வரிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கர்ணன் மற்றும் ஆசிரியர்கள்  ஊக்கமளித்து பொது தேர்வு எழுத உதவி புரிந்தனர்.

மேலும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் நடக்க முடியாத சூழ்நிலையிலும் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார். அப்போது  செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னால் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலையிலும் நன்றாக படித்துள்ளதாகவும் தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடிப்பேன் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

அதே போல் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தது. இந்த சூழ்நிலையில் உமா மகேஸ்வரி 600க்கு 543 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில்  மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க; LIVE AUTO REFRESH ON Tamil Live Breaking News : எனக்கு பிடித்த நதியில் ஒன்று தாமிரபரணி நதி - துரை முருகன்

இது குறித்து மாணவி உமா மகேஸ்வரி நமது நியூஸ் 18க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நன்றாக படித்து வந்தேன். கீழே விழுந்து நடக்க முடியாத சூழலில் வீட்டில் இருந்ததால் தேர்வு எழுத முடியாமல் போய்விடும் என மன வருத்தம் ஏற்பட்டது. எனக்கு என்னுடைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் சமூக ஆர்வலர்களும் நம்பிக்கை ஊட்டி தேர்வு எழுத வைத்தபர். தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடிப்பேன் என்று எதிர்பார்த்தேன்.  ஆனால், 543 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளேன். எனக்கு வருத்தமாக இருந்தாலும் முடியாத சூழலிலும் மூன்றாம் இடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது” தெரிவித்தார்.

செய்தியாளர்: சிவக்குமார், திருமங்கலம்.

First published:

Tags: 12th Exam results, Madurai, Tirumangalam Constituency