முகப்பு /மதுரை /

மதுரை தெப்பக்குளம் பகுதியில் களைகட்டும் தாத்தா பாட்டி நடத்தும் டிபன் சென்டர்...

மதுரை தெப்பக்குளம் பகுதியில் களைகட்டும் தாத்தா பாட்டி நடத்தும் டிபன் சென்டர்...

X
டிபன்

டிபன் கடையில் பாட்டி

Madurai | மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தாத்தா, பாட்டி இணைந்து நடத்தி கடைக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பொழுதுபோக்கு இடமாக மாறி வருகின்றது. இதனால் இப்பகுதியில் பல்வேறு விளையாட்டு தளங்களும், உணவு கடைகளும் எக்கச்சக்கமாக உருவாகிவருகிறது. அதில் ஒரு கடை தான் மதுரை டிபன் சென்டர். இந்த கடையை கடந்த ஏழு மாதமாக ஒரு தாத்தாவும் பாட்டியும் நடத்திவருகிறார்கள்.

இந்த கடை மதியம் 12 மணியிலிருந்து இரவு 11 மணி வரைக்கும் இயங்கிவருகிறது. மதியம் 12 மணி அளவில் இந்த கடையில் விதவிதமான வெரைட்டி ரைஸ் கிடைக்கிறது. தக்காளி சாதம், குஸ்கா, புளியோதரை, லெமன் சாதம் போன்ற உணவுகளும் இரவு நேரங்களில் இட்லி, தோசை, சப்பாத்தி, ஆம்லெட் அதற்கு ஏற்றார் போல் இரண்டு வகையான சட்னி, சாம்பார் போன்றவை சுட சுடச் கிடைக்கிறது.

தக்காளி சாதம், குஸ்கா 40 ரூபாய்க்கும், லெமன், தயிர் சாதம் 30 ரூபாய்க்கும், இரவு நேரத்தில் விற்கப்படும் இட்லி ஆறு ரூபாய்க்கும் சப்பாத்தி 15 ரூபாய்க்கு என மலிவான விலையில் விற்க்கப்படுகின்றது.

டிபன் கடையில் தாத்தா

இக்கடை குறித்து பேசிய வாடிக்கையாளர்கள், ‘கல்லூரி முடித்துவிட்டு மதியம் சாப்பிடுவதற்கு இந்த கடைக்கு தான் வருவோம். இங்குள்ள தக்காளி சாதம், லெமன் சாதம், குஸ்கா போன்றவை குறைந்த விலையில் நன்றாக இருக்கும்.

வேலையை முடித்துவிட்டு இரவு நேரங்களில் இப்பகுதிக்கு வரும் பொழுது இந்த கடையில் தினமும் சாப்பிட்டு விட்டு தான் செல்வோம. வீட்டில் செய்வது போலவும் இருப்பதால் இக்கடையில் சுவை நன்றாக இருக்கும்.

மதுரைல இப்படி ஒரு கடையா? காஸ்ட் அயன் மூலம் செய்யப்பட்ட விதவிதமான சமையல் பாத்திரங்கள்

கடையில் விற்கப்படும் இட்லி பஞ்சு போன்றும், காரங்கள் அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் சரியான விதத்தில் இருப்பதால் இந்த கடையின் சுவையே தனி என்கிறார்கள்.

வீட்டில் செய்வது போன்று உணவு சுவையும் தாத்தா பாட்டியின் பாசமும் சேர்ந்து இக்கடையில் இரவு நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.

First published:

Tags: Local News, Madurai