Home /madurai /

பாண்டிய மன்னனை மன்னிப்பு கேட்க வைத்த மாணிக்கவாசகர்- திருவாதவூர் கோவில் வரலாறு தெரியுமா?

பாண்டிய மன்னனை மன்னிப்பு கேட்க வைத்த மாணிக்கவாசகர்- திருவாதவூர் கோவில் வரலாறு தெரியுமா?

திருவாதவூர்

திருவாதவூர் கோவில்

Madurai | மதுரை மாவட்டம் திருவாதவூரிலுள்ள மாணிக்கவாசகர் கோவில் மிகவும் பிரபலமானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள சிறு கிராமம் தான் திருவாதவூர். மாணிக்கவாசகர் அவதரித்ததாக கூறப்படும் இந்த தலத்தில் உள்ள பிரம்மாண்ட சிவாலயம் மிகவும் சிறப்புக்கு உரியது. வேதமும் ஞானமும் யோகமும் தந்தருளக்கூடிய இந்த ஒப்பற்ற தலத்தில் மாணிக்கவாசகர் அவதரித்ததில் என்ன சிறப்பு உள்ளது.

மாணிக்கவாசகரின் இயற்பெயர் வாதுஊரான்(வாதூரான்) என்பதாகும். தென்னவன் பிரம்மராயன் பாண்டிய மன்னனின் அவையில் அமைச்சராக இருந்தார் மாணிக்கவாசகர். சிவனின் மீது மாறாத பக்தி கொண்டவர் இவர். கோடிப் பொன் கொடுத்து குதிரைகள் வாங்கி வர பாண்டிய மன்னன் உத்தரவிட அதன்படி கிளம்பிச் சென்றவர் திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார்கோவிலுக்கு வந்தார்.

அங்கே குருந்த மரத்தடியில் சிவனே குரு வடிவில் அமர்ந்து, சிவஞானத்தைப் போதித்து, வாதவூராருக்கு தீட்சை அளித்து அருளினார். அங்கேயே சிவபூஜையில் ஒன்றிப் போனார் மாணிக்கவாசகர். அவருடன் வந்த பணியாளர்கள், குதிரை வாங்கக் கிளம்பலாமா? என்று கேட்க ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும் செல்லுங்கள் எனக்கூறி அவர்களை அனுப்பிவிட்டு மாணிக்கவாசகர் அங்கேயே தங்கிவிட்டார்.

கூறிய நாளில் குதிரைகள் வராதது கண்டு கொதித்துப் போன பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரைத் தண்டிக்க எண்ணினான். மாணிக்கவாசகர் மனதார சிவனை வேண்ட நரிகளை குதிரைகளாக மாற்றி மன்னனிடம் அனுப்பினார் சிவன். ஆனால் அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறிப்போயிருந்தன. ஆத்திரம் அடைந்த மன்னன் கொடுத்த பொற்காசுகளை என்ன செய்தாய்? அவற்றை இக்கணமே திருப்பிக் கொடு என்று சொல்லி மாணிக்கவாசகரை கொதிக்கும் வைகையாற்று மணலில் நிறுத்தும்படி உத்தரவிட்டார்.

அங்கே வைகையில், கங்கை நீரானது பெருக்கெடுத்து ஓடியது. வெயில் மறைந்து நிலமாணது குளிர்ந்து போனது.  மாணிக்கவாசகரின் பேராற்றலை உணர்ந்த மன்னன் அவரிடம் மன்னிப்புக் கேட்டான். அதையடுத்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம். அவர் அவதரித்த திருவாதவூரில், திருமறைநாதர் கோயிலுக்கு அருகிலேயே மாணிக்கவாசகருக்குக் கோயில் கட்டி வழிபடுகின்றனர் மக்கள்.

அத்தகைய கோயில் மட்டுமல்லாது மாணிக்கவாசகர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட பல விஷயங்கள் இன்றும் திருவாதவூரில் காணப்படுகின்றன.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி