Home /madurai /

Madurai | திருப்பரங்குன்றம் மலைச் சரிவில் 1,000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

Madurai | திருப்பரங்குன்றம் மலைச் சரிவில் 1,000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை கல்வெட்டு

மதுரை கல்வெட்டு

Madudrai | மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணர் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவின் பின்புறம் உள்ள மலைச்சரிவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமண துறவியர் வடக்கிருந்து உயிர் நீத்த செய்தியை கூறும் கல்வெட்டு ஒன்று தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இக்கல்வெட்டானது கிரந்தமும், தமிழும் கலந்து எழுதப்பட்டுள்ளது.

இதனை மதுரை பாண்டிய நாடு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் உதயகுமார், முத்துப்பாண்டி, முருகன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

"அரிட்டநேமிபடாரர்" என்னும் சமண துறவி சல்லேகணை என்று கூறப்படும் வடக்கிருந்து நோன்பு நோற்று உயிர்நீத்த இடம் என்பதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. "அரிட்டநேமிபடாரர் நிசிதிகை இது" என்பது இக்கல்வெட்டின் பாடம்.

முன் இரண்டு வரிகளின் தொடக்கம் சேதம் அடைந்து உள்ளதால் எத்தனை நாள் நோன்பு இருந்தார் என்பதை அறிய முடியவில்லை. நாற்பது அல்லது ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்கள் இருக்கலாம், "பது" என்று முடிக்கபட்டுள்ளதால் இருபது முதல் எம்பது நாட்கள் வரை குறிக்கலாம் என்று அறியப்படுகிறது.

நிசிதிகை என்ற சொல் பாண்டியநாடு கல்வெட்டுகளில் இதுவரை கண்டறியப்பட்டதில்லை இதுவே முதல் முறையாகும். தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் உள்ளடக்கிய ஊர்களில் இதுபோன்ற நிசிதிகை கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் சங்ககாலத்திலேயே முக்கிய சமணர் தளமாக விளங்கியுள்ளது இதன் மூலம் தெரியப்படுகிறது. இதுபோக கி.மு முதல் நூற்றாண்டை சேர்ந்த மூன்று தமிழ் பிராமி கல்வெட்டுகள் திருப்பரங்குன்றம் மலையில் காணப்படுகின்றன.

இக்கல்வெட்டிற்கான விளக்கத்தை பாண்டியநாடு வரலாறு ஆய்வு மையத்தின் சாந்திலிங்கம் கூறினார். இக்கல்வெட்டு உள்ள இடத்தில் ஒரு துறவியர் மடம் இருந்ததற்கான கட்டுமான தடங்களும் காணப்படுவதாக இவர் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி