Home /madurai /

Madurai | திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவவிழா தொடக்கம்

Madurai | திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவவிழா தொடக்கம்

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

Madurai | மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஊஞ்சல் உற்சவத் திருவிழா பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக தொடங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஆனி ஊஞ்சல் உற்சவ திருவிழாவும் ஒன்று.

ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இத்திருவிழாவையொட்டி கோயிலுக்குள் அமைந்துள்ள திருவாச்சி மண்டபத்தில் விசேஷ ஊஞ்சல் அமைக்கப்பட்டு அதில் தினமும் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் இணைந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்


தொடர்ந்து வருகிற 12ம் தேதி வரை சுவாமி தினமும் ஊஞ்சலில் தெய்வானையுடன் அருளபாளிப்பார். காப்பு கட்டுதலை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி புறப்பட்டு திருவாச்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் அம்பாளுடன் முருகன் அமர்ந்து ஊஞ்சலாடி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்


விழாவின் 10ம் நாளான 13ம் தேதி பகல் 12 மணியளவில் உச்சிக்கால வேளையில் மூலஸ்தானத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி, சத்திய கிரிஸ்வரர், பவளக்கணிவாய் பெருமாள், துர்க்கை, கற்பக விநாயகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் மா, பலா, வாழை ஆகிய முப்பழங்கள் கொண்டு பூஜை நடத்தப்படும். இவ்விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி