முகப்பு /செய்தி /மதுரை / தமிழில் 100க்கு 138 மார்க்.. 514 வாங்கியும் 4 பாடங்களில் ஃபெயில்.. பிளஸ் டூ மதிப்பெண் சர்ச்சை

தமிழில் 100க்கு 138 மார்க்.. 514 வாங்கியும் 4 பாடங்களில் ஃபெயில்.. பிளஸ் டூ மதிப்பெண் சர்ச்சை

குழப்பமான மதிப்பெண் முடிவு வந்த மாணவி ஆர்த்தி

குழப்பமான மதிப்பெண் முடிவு வந்த மாணவி ஆர்த்தி

12TH Results 2023 | பள்ளிக்கூடம் சென்று கேட்டபோது உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என மாணவி விளக்கம்

  • Last Updated :
  • Madurai, India

மதுரை திருப்பரங்குன்றம் அருகே, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்கு தமிழில் 100க்கு 138 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் அருகேயுள்ள சூரக்குளத்தைச் சேர்ந்தவர் ஆர்த்தி. 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த இவருக்கு ஆன்லைனில் வெளியான தேர்வு முடிவுகள் குழப்பமாக பதிவாகியுள்ளன. குறிப்பாக, தமிழில் 100 க்கு 138 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் 4 பாடங்களில் தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் பெற்றபோதும் அவர் தேர்ச்சி அடையவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் 100 க்கு 138 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 100க்கு 92 மதிப்பெண்களும், கணிதத்தில் 100க்கு 56, மதிப்பெண்களும், இயற்பியல் துறையில் 100க்கு 75 மதிப்பெண்களும், வேதியல் துறையில் 100க்கு 71 மதிப்பெண்களும் உயர்கணிதத்தில் 100க்கு 82 மதிப்பெண்களும் பெற்றதாக முடிவுகள் வெளியாகி இருந்தது. 600 க்கு 514 மதிப்பெண் எடுத்தும் நான்கு பாடங்களில் தேர்ச்சி இல்லை என முடிவுகள் வந்ததை அடுத்து குழப்பமடைந்தள்ளார் ஆர்த்தி.

பள்ளிக்கூடம் சென்று கேட்டபோது உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் உயர் கல்வி படிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் 600 க்கு 514 மதிப்பெண் எடுத்து நான்கு பாடத்தில் தோல்வி என்றும் வந்துள்ளதால் மிகவும் வேதனையில் இருப்பதாக மாணவி ஆர்த்தி தெரிவித்தார்.

top videos

    செய்தியாளர்: சிவக்குமார் (மதுரை)

    First published:

    Tags: Madurai, Public exams