மதுரை - திருமங்கலம் இடையிலான 17 கிலோமீட்டர் தொலைவிற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. இதனை அடுத்து கடந்த பிப்ரவரிமாதம் 13, 14 ஆகிய தேதிகள் அதிவேக சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் புதிய இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளும் மின் மயமாக்கல் இணைப்பு பணிகளும் நடைபெற்றதால் திருமங்கலம் ஆர்வி பட்டி இடையிலான இந்த தடத்தில் மட்டும் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக மதுரை திருமங்கலம் புதிய இரண்டாவது அகல ரயில் பாதையில் அதிவேக சோதனை ரயில் ஓட்டம் நாளை மாலை 6:00 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது.
தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அலுவலர் குப்தா அவர்கள் இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளார். இந்த அதிவேக சோதனை ரயில் ஓட்டம் நடைபெறும் வேளையில் பொதுமக்கள் ரயில் பாதை அருகே வசிப்போர் புதிய அகல ரயில் பாதையை கடக்கவோ அல்லது நெருங்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று மதுரை ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Train