முகப்பு /மதுரை /

புதுப்பொலிவுக்கு தயாராகும் மதுரை திருமலை நாயக்கர் மஹால்.. மன்னர் காலத்து பாணியில் புதுப்பிப்பு பணிகள்..

புதுப்பொலிவுக்கு தயாராகும் மதுரை திருமலை நாயக்கர் மஹால்.. மன்னர் காலத்து பாணியில் புதுப்பிப்பு பணிகள்..

X
மதுரை

மதுரை நாயக்கர் மஹால்

Madurai Thirumalai Nayakkar Mahal | மதுரையில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கக்கூடிய இடங்களில் ஒன்று மதுரை திருமலை நாயக்கர் மஹால்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ள திருமலை நாயக்கர் மஹால், நாயக்கர் ஆட்சி காலத்தில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்டமான மஹால் காலப்போக்கில் அழிந்து தற்பொழுது கால்வாசி பகுதியே மிஞ்சி உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தொல்லியல் துறை சார்பாக 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமலை நாயக்கர் மகாலின் தரைத்தளம், மன்னர் காலத்து பாணியில் புதுப்பிக்கப்படுகின்றது.

அதாவது மகாலின் உட்பகுதியில் ஒளி, ஒலி காட்சி நடக்கும் இடத்தில் கிரானைட் தளமாகவும் மகாலின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதிகளில் தரை மற்றும் சிமென்ட் தளமாகவும் ஒவ்வொரு இடத்திற்கேற்ப தரை பகுதிகள் மாறி மாறி உள்ளது.

மதுரை நாயக்கர் மஹால்

இவற்றை ஒரே மாதிரியான தரைத்தளமாக சீரமைக்க வேண்டும் என்று தொல்லியல் துறை சார்பாக 10 ஆயிரம் சதுர அடி கொண்ட தரைத்தளத்தை பாலிஷ் செய்யப்பட்ட கிரானைட் கற்களால் புதுப்பிக்கும் போது நாயக்க மன்னர் காலத்து பாரம்பரியத்தில் அமையும் என்று கூறப்படுகின்றது.

ரேஷன் அரிசி கடத்தலா? - மதுரைவாசிகள் இந்த தொலைபேசி எண் மூலம் புகார் அளிக்கலாம்...

அந்த வகையில் திருமலை நாயக்கர் மகாலின் தரைத்தளத்தில் உள்ள கற்களை எடுக்கும் பணிகளும் தூண்களை புதுப்பிக்கும் பணிகளும் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

மேலும் மஹாலில் மராமத்து பணிகள் நடைபெற்றாலும் எப்பொழுதும் போல பொது மக்களின் வருகையான காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என்பதில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Madurai