முகப்பு /மதுரை /

மதுரை மக்களுக்கு குட்நீயூஸ்.. மினி பீச்சில் தொடங்கியது படகு சவாரி!

மதுரை மக்களுக்கு குட்நீயூஸ்.. மினி பீச்சில் தொடங்கியது படகு சவாரி!

X
மதுரையில்

மதுரையில் படகு சவாரி

Madurai News : மினி பீச் என்று சொல்லக்கூடிய மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் பொதுமக்கள் செல்லும் படகு சவாரி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் சமீப காலமாக கோடை மழை பெய்ததை தொடர்ந்து மீண்டும் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் தண்ணீரால் நிரம்பி வழிகின்றது.

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் சில ஆண்டுகளுக்கு முன்னாடி பராமரிப்பு இன்றி இளைஞர்களின் கிரிக்கெட் மைதானம் ஆகவும், தண்ணீரே இல்லாமல் எப்பொழுதும் வற்றியே இருந்த தெப்பக்குளத்தை பொதுப்பணித்துறை சார்பாக வைகை ஆற்றில் ஆழ்வார்புரம் பகுதியிலும் ஏவிபாலம் பகுதியிலையும் இரண்டு தடுப்பணைகள் கட்டி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது பின்பு அதன் மூலமாக மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்பு குளங்களில் நான்கு திசைகளிலும் உள்ள படிக்கட்டுகளில் வேலி கம்பிகள் அமைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மூலமாக மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் எப்பொழுதுமே நீர் நிரம்பியே இருக்கும் என்று பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த மாதம் வெயிலின் தாக்கமானது 41 டிகிரி செல்சியஸ் வரை இருந்ததால் படிப்படியாக தெப்பக்குளம் உள்ள தண்ணீர் குறைய ஆரம்பித்தது இந்த நிலையில் இந்த மாதம் பெய்த கோடை மழையும் மற்றும் சித்திரை திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. இதனால் தடுப்பணையில் தேய்க்க தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது தற்பொழுது தண்ணீர் ஆனது மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் நிரம்பும் வகையில் திறந்து விடப்பட்டதால் மீண்டும் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் தண்ணீரால் நிரம்பி உள்ளது.

இதனால் மினி பீச் என்று சொல்லக்கூடிய மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் பொதுமக்கள் செல்லும் படகு சவாரி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இது போக கோடை விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கு பொழுது போக்கு இடமாக இருக்கக்கூடிய தெப்பக்குளத்தில் மீண்டும் படகு சவாரி தொடங்கியுள்ளதால் மதுரை மக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Boats, Local News, Madurai