முகப்பு /மதுரை /

மதுரை நகருக்குள் இப்படி ஒரு இடமா? தல்லாகுளம் தெப்பக்குளம் போயிருக்கீங்களா?

மதுரை நகருக்குள் இப்படி ஒரு இடமா? தல்லாகுளம் தெப்பக்குளம் போயிருக்கீங்களா?

X
தல்லாகுளம்

தல்லாகுளம் தெப்பக்குளம் பூங்கா

Madurai | மதுரை தல்லாகுளம் தெப்பக்குளம் குழந்தைகள் குவியும் பூங்காவாக மாறியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் மிகவும் பிரபலமான இரண்டு குளங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்,மற்றொன்று மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தெப்பக்குளம். சமீப காலமாக இந்த இரண்டு தெப்பக்குளங்களும் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு இடங்களாக மாறிவருகிறது.

இந்நிலையில் தல்லாகுளம் வெங்கடாசலபதி கோவிலுக்கு சொந்தமான தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய தெப்பக்குளம் ஒரு காலத்தில் பராமரிப்பின்றி அசுத்தமாக காணப்பட்டது. தற்போதுதெப்பக்குளம் முழுவதும் குழந்தைகள் நிரம்பி வழியும்விளையாட்டு பூங்காவாக மாறி உள்ளது.

தல்லாகுளம்மெயின் ரோட்டில் அமைந்துள்ள தெப்பக்குளம் அல்லது தல்லாகுளம் பூங்கா என்று சொல்லக்கூடிய இவ்விடத்திற்கு நுழைவு கட்டணமாக இருபது ரூபாய் வசூலிக்கப்படுகின்றது.

தல்லாகுளம் பூங்கா

குளத்தின் நுழைவாயில் இருந்து குளத்தைச் சுற்றிலும் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கு என பிரத்தியோகமாகவே விளையாட்டுத்தளங்களான சர்க்கஸ் ஊஞ்சல், உயரமான ராட்டினங்கள், ஜம்பிங் பவுன்ஸ் வாட்டர் போட்டிங், டோரா ரைட், 3டி ஷோ, பேய் வீடுகள், நடமாடும் நான்கடுக்கு பெட்டி கொண்ட ட்ரெயின், கார்கள் மற்றும் குதிரை சவாரி, ஒட்டக சவாரி என பார்க்கும் இடமெல்லாம் குழந்தைகள் இயற்கையோடு இயற்கையாய் மகிழ்ச்சியாக விளையாடும் தளமாக காணப்படுகின்றது.

ஈஷா யோகா மகா சிவராத்திரி கொண்டாட்டம்- மதுரையில் செல்லும் ரத யாத்திரை பவனி

இதுபோக குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு வகைகளும் கோவிலின் சார்பாக டென்டர் மூலமாக இங்கு விற்கப்படுகின்றது.பொதுவாகவே இவ்விடத்தில் கூட்டம் அலைமோதும். அதுவும் விடுமுறை நாட்களானசனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களின் கூட்டம் திருவிழா போல் இருக்கும். நீங்களும் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இவ்விடத்திற்கு சென்று வரலாம்.

First published:

Tags: Local News, Madurai