Home /madurai /

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகள்

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகள்

மதுரை

மதுரை தல்லாகுளம் கோவில்

மதுரையில் அமைந்துள்ள ஶ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் தென்னாட்டின் திருப்பதி என்று சொல்லும் அளவிற்கு பிரசித்தி பெற்றதாய் விளங்குகிறது.

தமிழக வரலாற்றோடும் ஆன்மிக வரலாற்றோடும் நெருங்கிய தொடர்புடைய நகரம் மதுரை. சைவமும், வைணவமும் தழைத்து ஓங்கி நிற்கும் இடம்.

அவ்வாறு மதுரையின் பிரதானப் பகுதியான தல்லாகுளத்தில் இருக்கும் ஆலயம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயில்.
17-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட ஆலயம் இது. இந்த ஆலயம் உருவான வரலாறு பலவாறு சொல்லப்படுகிறது. இங்கு கருவறையின் அருகிலேயே சுயம்பு ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இந்த ஆஞ்சநேயர் உக்கிர ஆஞ்சநேயர் என்கிறார்கள். ஒரே கல்லில் உருவான மூர்த்தி இவர்.

தல்லாகுளம் கோவில்


வாலில் மணியும் கையில் தாமரை மலர் ஏந்தியும் மற்றொரு கரத்தில் அபய முத்திரையும் காட்டி அருள்கிறார் ஆஞ்சநேயர். இந்த அனுமன் உக்கிர மூர்த்தியாக அருள்வதால் இவரின் உக்கிரத்தைத் தணிக்கும் வண்ணம் எதிரே சங்கு சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கலை நயம் மிக்க இந்தத் திருக்கோயிலில் அருளும் மூலவர் திருநாமம், "பிரசன்ன வேங்கடாசலபதி" என்பதாகும். உள்ளே கருவறையில் வேங்கடாசலபதி நின்றகோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி அருள்கிறார். நேராக நின்று தரிசனம் செய்தால் பெருமாள் மட்டுமே காட்சிகொடுப்பார். அருகில் சென்றால் ஸ்ரீதேவி பூதேவித் தாயாரையும் தரிசனம் செய்து மகிழலாம். இக்கோயில் உற்சவருக்கு, ஸ்ரீநிவாசன் என்று பெயர். இந்தக் கோவிலில் காலை 9.30 மணிக்கு நடை திறக்கப்படும்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி