மதுரையில் திடீரென இரவு நேரத்தில் பயங்கரமான இடி மின்னல் காற்றுடன் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பொதுவாகவே சித்திரை மாதமான கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை நேரத்தில் அவ்வப்பொழுது சாரல் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மேல் வளிமண்டலத்தின் கீழ அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதினால் இன்னும் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை அல்லது கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதையும் படிங்க | இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி... 591 மதிப்பெண்கள் எடுத்து சாதனை!
அந்த வகையில் மதுரையில் மூன்று மாவடி ரிசர்வ் லைன் ஐயர் பங்களா, தல்லாகுளம் சின்ன சுக்கி குளம் கோரிப்பாளையம் அண்ணா பேருந்து நிலையம் சிம்மக்கல் குருவிக்காரன் சாலை விரகனூர் ரிங் ரோடு வண்டியூர் அனுப்பானடி போன்ற பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பயங்கரமான இடி மின்னல் காற்றுடன் சுமார் ஒரு மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது. காற்றுடன் சேர்ந்து கன மழை பெய்ததால் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டுவதில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர் மேலும் காற்றும் பலமாக வீசுவதால் பல்வேறு பகுதிகளில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் வேரோடும் மரங்கள் சாய்ந்து விழுந்து நிலையில் தற்பொழுதும் பயங்கரமான இடி மின்னல் காற்றுடன் கனமழை பெய்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyclone, Heavy rain, Local News, Madurai