முகப்பு /மதுரை /

வருங்கால ஐஏஎஸ், ஐபிஎஸ்களை உருவாக்க போகும் இடம்.. மதுரை படிப்பக பூங்காவிற்கு ஒரு விசிட்..!

வருங்கால ஐஏஎஸ், ஐபிஎஸ்களை உருவாக்க போகும் இடம்.. மதுரை படிப்பக பூங்காவிற்கு ஒரு விசிட்..!

X
மதுரை

மதுரை படிப்பக பூங்கா

Madurai Study Park : மாணவ, மாணவிகளுக்கு என தமிழகத்திலேயே முதன் முதலாக பிரத்யோகமாக படிப்பகப் பூங்கா மதுரையில் திறக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் உள்ள மதுரை உலக தமிழ்ச் சங்கம் அருகில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் முயற்சியால் ரூ.30 லட்சம் செலவில் படிப்பகப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வு மாணவர்களுக்காகவே பிரத்தியோகமாகவே இந்த பூங்கா கட்டிகொடுக்கப்பட்டுள்ளது. காலை 6 மணியிலிருந்து 10 மணி வரைக்கும், இந்த பூங்கா திறந்திருப்பதால் ஒரு நாளைக்கு 30க்கும் மேற்பட்ட போட்டி தேர்வர்கள் இங்கு வந்து அமைதியான சூழ்நிலையில் படிக்கின்றனர். இந்த பூங்கா மதுரை மக்களுக்கு எப்படியெல்லாம் வசதியாக உள்ளது என்று கேட்டு தெரிஞ்சுக்கலாம்.

இதுகுறித்து போட்டி தேர்வர்கள் கூறுகையில், “இந்த பூங்காவில் உட்கார்ந்து படிப்பதற்காக மரத்தடியில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு படிப்பதற்கு ஏதுவாக உள்ளது. வீட்டில் இருந்தால் மன குழப்பத்தில் படிக்கக்கூடிய சூழ்நிலை இருக்கும். ஆனால் இங்கு வந்து படிக்கும்போது அமைதியான சூழ்நிலை இருக்கிறது. இந்த படிப்பக பூங்கா வசதியாக உள்ளது. முதலில் நாங்கள் மாநகராட்சி அருகில் உட்கார்ந்து படிக்கும்போது கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி ஏதும் இருக்காது.

ஆகையால் அங்கு உட்கார்ந்து படிப்பதற்கு சிரமமாக இருந்தது. ஆனால் எம்.பி.சு.வெங்கடேசனின் முயற்சியால் கட்டப்பட்ட பூங்காவில் கழிப்பறை வசதி, தண்ணீர் வசதிகள் இருப்பதால் இந்த பூங்கா படிப்பதற்கு வசதியாக உள்ளது. இந்த பூங்காவை எங்களுக்காக கட்டி கொடுத்த எம்.பி. சு.வெங்கடேசனுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இங்கு உட்கார்ந்து படிப்பதற்கு வசதியாக உள்ளது. ஆனால் ஒருபுறம் சுவர் எழுப்பாத காரணத்தினால் வெளியில் செல்லும் வாகனங்களால் மைண்ட் டிஸ்ட்ராக்ட் ஆவதால் படிப்பதற்கு சற்று சிரமமாக உள்ளது.

இதுபோக தண்ணீர் வசதி மேம்படுத்த வேண்டும். மாநகராட்சி தண்ணீர் சற்று அசுத்தமாக காணப்படுவதால் மினரல் வாட்டரை வைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். தற்போது வரை இருக்கும் ஒரு கழிப்பறை போதுமானது. ஆனால் இப்பகுதியில் படிப்பதற்கு கூட்டம் அதிகரித்தால் ஒரு கழிவறை போதாத நிலை ஏற்படும். இதனையும் சரி செய்து கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பெண்களும் இங்க வந்து படிப்பதற்கு பாதுகாப்பாக உள்ளது. ஏனென்றால் பூங்காவை சுற்றிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக பூங்காவின் நுழைவாயிலில் வாட்ச்மேன் ஒருவரும் இருப்பதால் அச்சமின்றி இப்பகுதியில் படிக்க ஏதுவாக உள்ளது. ஆண், பெண் எனதனியாக கழிப்பறை இருப்பதாலும் பெண்கள் சிரமமின்றி இப்பகுதியில் படிக்க இயலும். படிப்பதற்கு படிப்பக பூங்கா நன்றாக உள்ளது. ஆனால் தண்ணீர் வசதி மற்றும் சுற்றுச்சுவரை எழுப்புதல் மற்றும் கூடுதல் கழிவறை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும்” என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

First published:

Tags: Local News, Madurai