Home /madurai /

மதுரை சிக்கந்தர் சாவடியில் 15 தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை... பொதுமக்கள் வேதனை..

மதுரை சிக்கந்தர் சாவடியில் 15 தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை... பொதுமக்கள் வேதனை..

தெரு

தெரு நாய்கள்

மதுரை இ.எம்.டி நகரில் 15க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை சிக்கந்தர் சாவடியை அடுத்துள்ள இ.எம்.டி நகர் பகுதியில் தெரு நாய்கள் மர்ம நபர்களால் விஷம் வைத்து கொல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மதுரையிலிருந்து அலங்காநல்லூர் செல்லும் பிரதான சாலையில் உள்ள பகுதி தான் இ. எம் டி நகர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக இங்குள்ள தெரு நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டு இதுவரை 15க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக இங்கு வசிப்பவர்கள் வேதனை தெரிவிகின்றனர்.

இஎம்டி நகர்


இங்குள்ள நாய்களால் அப்பகுதி மக்களுக்கு எந்த ஒரு தொந்தரவோ, ஆச்சுறுத்தலோ இல்லாத நிலையிலும் இந்த செயலை செய்வது யார் என்ற கேள்வி அங்கு வசிப்பவர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

இஎம்டி நகர்


இதுகுறித்து இ.எம்.டி நகரில் வசிக்கும் சுமதி என்ற பெண்மணி நமக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘இங்குள்ள தெரு நாய்கள் யாருக்கும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்றும் அதற்கு மாறாக பாம்பு, தேள் போன்றவைகள் வீட்டிற்குள் நுழையும் நேரத்தில் கூச்சலிட்டு தகவல் தெரிவிக்கும் என்றும் கூறினார். மேலும் இவர் தன் வீட்டில் வளர்த்த மணி என்ற நாயும் வெளியில் சுற்றிவந்த பொழுது இந்த மர்மநபர்கள் வைத்த விஷம் கலக்கப்பட்ட உணவை உண்டதன் காரணமாக இறந்துவிட்டதாக வேதனைப்பட்டார்.

கொல்லப்பட்ட நாய்


மனிதர்கள் முக்கியமாக வளர்க்கும் செல்ல பிராணிகளில் நாய்கள் முக்கிய இடம் வகிப்பவை. நன்றி, விஸ்வவாசத்திர்க்கு நாய்களை சிறந்த உதாரணமாக நாம் அனைவரும் எடுத்துக்கொள்வதுண்டு. அவ்வாறு வாழும் நாய்களை விஷம் வைத்து கொள்வதென்பது முழுக்க முழுக்க குற்றச்செயல் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை..

இவ்வாறு நாய்களை கொல்பவர்களை தகுந்த சாட்சியத்துடன் பிடித்து காவல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மேலும் இதுபோல நாய்கள் கொல்லப்படாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே இ.எம்.டி நகர் பகுதி மக்கள் மட்டுமல்லாது அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி