முகப்பு /மதுரை /

ஒரு மீனில் இத்தனை வெரைட்டியா? மதுரையில் கிராமத்து சுவையில் அட்டகாசமான அசைவ ஹோட்டல்!

ஒரு மீனில் இத்தனை வெரைட்டியா? மதுரையில் கிராமத்து சுவையில் அட்டகாசமான அசைவ ஹோட்டல்!

X
மதுரை

மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கும் பிரபலமான அசைவ ஹோட்டல்

Madurai hotel | மதுரையில் அசைவ பிரியர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 25 வகைகளை கொண்ட கடையை பற்றி பார்க்கலாம்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில நான் வெஜ் ஹோட்டலை அடித்துக் கொள்ள எந்த ஒரு ஊரும் கிடையாது.. ஏனென்றால் சிக்கன், மட்டன், இறால் மீன் என அசைவ சாப்பாடு இருக்கும் அத்தனை வகைகளும் மதுரையில் சுவையாகவும், காரசாரமாகவும், தரமான முறையிலும் கிடைக்கின்றது.அப்படி மக்கள் கொண்டாடக்கூடிய அசைவ ஹோட்டல்களில் ஒன்றுதான் மதுரை தல்லாகுளம் பகுதியில் மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய கிராமத்து அடுப்பாங்கரை செட்டிநாடு அசைவ சைவ ஹோட்டல்..

இந்த ஹோட்டலில் என்ன ஸ்பெஷல் அப்படின்னு கேட்டீங்கன்னா நான் வெஜ்ல மட்டும் சிக்கன், மட்டன், கடல் மீன் உணவு என 25 வகையான அசைவ சாப்பாடுகள் வைத்திருக்கிறார்கள்.

அசைவ பிரியர்களுக்கு ஒரு பெரிய விருந்தே வைக்கக் கூடிய வகையில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, நாட்டுக்கோழி பிரியாணி ,மட்டன் சுக்கா, மட்டன் கோலா உருண்டை ,மட்டன் ஈரல், கிரேவி சிக்கன், கிரேவி சிக்கன் போன்லெஸ், சிக்கன் லாலிபாப், பெப்பர் சிக்கன் ப்ரை, அண்ட் கிரேவி போன்ற வகைகளும் கடல் மீன் விருந்தில் மதுரையில் மிகவும் பிரபலமான மதுரைக்கு வருவோர் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய அயிரை மீன் குழம்பு மற்றும் அயிரை மீன் ஆம்லெட், வஞ்சரம் ,நெத்திலி பிரான் கிரேவி, நண்டு கிரேவி ,வஞ்சரம் ஃப்ரை, நெத்திலி ஃப்ரை, மீன் ஃப்ரை என அசைவ உணவுகள் அனைத்தும் காரசாரமாகவும் சுவையாகவும் மனங்களை சுண்டி இழுக்க கூடிய வகையிலும் ஒரு விருந்தே சாப்பிடலாம்.

அசைவ பிரியர்களுக்கு மட்டுமா இத்தனை வகைகளா சைவத்திற்கு ஏதும் இல்லையா என்று கேட்டால் அதற்கும் இந்த  ஓட்டலில் வெரைட்டியான வகைகள் உள்ளது. சைவ பிரியர்களுக்கு எனவே அன்லிமிடெட் சாப்பாடு சாம்பார் ரசம் அப்பளம் பாயாசம் மோர் ஊறுகாய் இரண்டு வகை பொரியல் போன்றவையும் இந்தப் பொரியலில் ஏதேனும் பிடிக்கவில்லை என்றால் அதற்கு ஈடாக காளான், பட்டர் பீன்ஸ், கீரை ,வாழைப்பூ கூட்டு, வாழைப்பூ வடை என்று சைவத்திற்கும் அத்தனை வெரைட்டிகள் இருக்கின்றது.

சைவத்திற்கே டப் கொடுக்கும் வகையில் அசைவத்திற்கும் பஞ்சமில்லை என்றும் சொல்லும் அளவிற்கு சுவையான அத்தனை உணவுகள் கிடைக்கின்றது. இவ்வளவு வெரைட்டியான உணவுகளின் விலை எவ்வளவு என்று தெரியுமா அசைவம் என்று பார்த்தால் அயிரை மீன் மட்டும் 250 மற்றபடி சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, மீன் குழம்பு, சிக்கன் பிரியாணி, நாட்டுக்கோழி பிரியாணி என எது எடுத்து சாப்பிட்டாலும் 150 முதல் 200 வரைக்கும் கொடுக்கின்றார்கள் இதுவே சைவம் என்று எடுத்து விட்டால் ₹90-க்கு கொடுக்கின்றார்கள் கூடுதலாக காளான் பட்டர் பீன்ஸ் வாழைப்பூ வடை போன்றவை 20 மற்றும் 40 ரூபாய்க்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதையும் படிங்க | மதுரையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை.. குஷியில் மக்கள்!

இதுபோக இந்த ஓட்டலில் தனித்துவமான விஷயம் என்னவென்றால் நமது வீட்டில் செய்வது போல வீட்டு பக்குவத்துடன் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து இந்த ஓட்டலை நடத்தி வருகின்றார்கள் அதாவது சமையல் செய்வது இருந்து அதை இறக்கி வைத்து வரும் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறும் வரைக்கும் முழுக்க முழுக்க பெண்கள்தான் இந்த வேலைகளை செய்து வருகின்றார்கள்.

ஏனென்றால் இந்த ஓட்டலின் கடை உரிமையாளர் சத்தியபிரியா சாப்பாடு செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஆகவே இந்த ஓட்டலை நிறுவி பெண்கள் எல்லா துறைகளிலும் சாதித்துக் கொண்டு வருகின்றார்கள் ஆகையால் பெண்களால் ஹோட்டல் நடத்த முடியும் என்றும் பெண்களின் கை பக்குவம் தனியாக இருக்கும் என்பதால் பெண்களை வைத்து இந்த ஓட்டலை கடந்த ஆறு வருடங்களாக நடத்திக் கொண்டு வருகின்றார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Hotel, Local News, Madurai