முகப்பு /மதுரை /

மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறும் மதுரை சிம்மக்கல் மேம்பாலம்.. நடவடிக்கை பாயுமா?

மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறும் மதுரை சிம்மக்கல் மேம்பாலம்.. நடவடிக்கை பாயுமா?

X
மதுரை

மதுரை சிம்மக்கல் மேம்பாலம்

Madurai District | ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொழுதுபோக்கு இடமாக இருந்து மதுரையில் சிம்மக்கல் மேம்பாலம் பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைத்தல், பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைத்தல், பேருந்து நிறுத்தத்தை நவீனப்படுத்துதல் என பல்வேறு வகையான திட்டங்கள் அமல் படுத்தப்பட்டன.

அந்த வகையில் மதுரையில் முக்கிய போக்குவரத்து இடமாக விளங்கக்கூடிய மேம்பாலம் தான் சிம்மக்கல் மேம்பாலம். இந்த மேம்பாலத்திற்கு கீழ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்,போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இங்குள்ள ஒவ்வொரு தூண்களிலும் பாரம்பரியமான ஓவியங்கள் வரையப்பட்டும் ஒவ்வொரு தூண்களை சுற்றி உட்காரு மேடைகள் அமைக்கப்பட்டன. தூண்களுக்கிடையே எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக மாற்றப்பட்டது.

ஆனால் தற்போது இந்தப் பகுதி முழுவதும் பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது. அலங்கார எல்இடி விளக்குகள் முழுவதும் வெளிச்சம் வராத வகையில் ஒட்டடைகள் படிந்தும், மேம்பாலத்தில் இருந்து வரும் மழைநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைந்தும், பாலம் முழுவதும் தூசிகள் படிந்தும், ஆங்காங்கே செடிகள் முளைத்தும் காட்சியளிக்கிறது.

அத்துடன், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இங்கே மது அருந்தக்கூடிய பார் போல் மாறியுள்ளது. பொது மக்களின் பொழுதுபோக்கு இடமாக இருந்த இந்த பகுதி,தற்பொழுது பராமரிப்பு இன்றி குடிகாரர்களின் கூடாரம்போல்மாறியுள்ளது.

இந்த மேம்பாலபகுதியை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

First published:

Tags: Local News, Madurai