கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. இனி வரும் காலம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் நம்மில் பல பேர் சில்லென்று ஏதும் குடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்போம். அதிலும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றை குடித்தால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா?
சமீப காலமாக மதுரை மக்கள் இளநீர் சேக், தேங்காய் பூ ஆகியவற்றை நோக்கி படையெடுக்கின்றார்கள். இதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். இதை சாப்பிட்டால் மன அழுத்தம் குறைக்க கூடியவையாகவும், உடலை குளிர்ச்சியாக வைக்கக் கூடியதாகவும், வயிற்றுப் புண்ணை ஆற்றக் கூடியதாகவும் உள்ளது என்று கூறுகிறார்கள்.
இதுகுறித்து பேசிய தெப்பக்குளத்தில் உள்ள கடை உரிமையாளர், ‘இளநீர் ஷேக் அப்படி என்றால் இளநீரில் உள்ள தண்ணீர் மற்றும் வழுக்கை என்று சொல்லப்படக்கூடிய தேங்காய் ஆகியவற்றை எவ்வித தண்ணீரும் இன்றி இரண்டையும் நன்றாக அரைத்து அதில் சப்ஜா விதையை சிறிதளவு ஊற்றினால் இளநீர் ஷேக் ரெடி ஆகிவிடும்.
இதை சாப்பிட்டால் மன அழுத்தத்தை குறைத்து விடுகின்றது. இதில் உள்ள சப்ஜா விதை உடலுக்கு குளிர்ச்சியை தருவதால் உடல் சூடுகள் ஏதுமின்றி இருக்க முடியும்.
தேங்காய் பூ அதாவது தென்னங்கன்று நாற்று வைப்போம். அதை மூன்று மாதம் அல்லது நான்கு மாதத்திற்குள் எடுத்தால் தேங்காயில் உள்ள தண்ணீர் தேங்காய் பூவாக மாறிவிடும்.
இதை சாப்பிட்டால் வயிற்றுப்புண், வாய் புண், குடல் புண், சர்க்கரை நோய், டயாபடீஸ் என வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்றக்கூடிய மருத்துவ குணமாக இருக்கின்றது என்கிறார். இயற்கையான முறையில் விற்கப்படும் இளநீர் சேகின் விலை 40 ரூபாய்க்கும் தேங்காய் பூவின் விலை 70 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகின்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai