முகப்பு /மதுரை /

காதலர் தினத்துக்காக வெரைட்டியான பூக்களாலான பொக்கே... மதுரை கடையில் அசத்தல் கிப்ட்ஸ்...

காதலர் தினத்துக்காக வெரைட்டியான பூக்களாலான பொக்கே... மதுரை கடையில் அசத்தல் கிப்ட்ஸ்...

X
பொக்கேக்கள்

பொக்கேக்கள்

Madurai | மதுரை அண்ணாநகர் பகுதியில் காதலர் தினத்தை முன்னிட்டு விதவிதமான பூக்களால், சாக்லேட்டால் செய்யப்பட்ட பொக்கே விற்பனை செய்யப்பட்ட வருகின்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி உலக காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

பிப்ரவரி மாதம் வந்தாலே நாம் அனைவரும் காதலர் தினத்தை கொண்டாடுவதில் மிகுந்த ஆர்வமாக இருப்போம். காதலித்தவர்கள் காதலை தெரிவிக்க காத்திருப்பவர்கள் என எல்லோரும் தனது காதலிக்காகவும் காதலனுக்காகவும் விதவிதமான கிஃப்ட் மற்றும் பொக்கே போன்ற பொருட்களை வாங்கி கொடுத்து கொண்டாடுவது வழக்கம் தான்.

அந்த வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு மதுரை அண்ணாநகரில் இருக்கக்கூடிய இடம் தான் ஸ்ரீ குரு மீனாட்சி பிளார் அண்ட் டெக்கரேஷன் ஷாப். இந்த கடையில் காதலர் தினத்தை முன்னிட்டு வண்ண வண்ண மற்றும் விதவிதமான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பொக்கேக்கள் விற்பனை செய்யப்படுகின்றது.

நமது காதலி மற்றும் காதலனுக்கு எந்த கலர் பிடிக்குமோ அதற்கு ஏற்றார் போல இங்கு பொக்கேகள் கஸ்டமைஸ் செய்து தரப்படுகின்றது. இது போக இங்கு டைரிமில்க், கிட்கேட் போன்ற விதவிதமான சாக்லேட்களினாலும் செய்யப்பட்ட பொக்கேக்கள் விற்பனை செய்யப்படுகின்றது. அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் இங்கு ஆர்டர் கொடுத்தால் அதை மிகவும் அழகாக தயார் செய்து தருகின்றார்கள்.

ஹே.. எப்புட்றா.... கண்ணாடி பாட்டினுள் தேங்காய் ஓட்டில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்

மேலும் பொக்கேக்கள் தவிர பல விதமான கிப்ட்கள் கிடைக்கின்றன. பில்லோ, மேஜிக் கப், கிப்ட் பாக்ஸ் என வெரைட்டியான கிப்ட் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த கடையில் 500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் 3,000 ரூபாய் வரைக்கும் பொக்கே மற்றும் கிப்ட் பொருட்கள் கிடைக்கின்றது. இதுபோக ஆன்லைன் மூலமாகவும் தரப்படுகின்றது.

First published:

Tags: Local News, Madurai