Home /madurai /

மதுரை ஷூட்டிங் ஸ்பாட்... வண்டியூர் தெப்பக்குளம் - இந்த சீனெல்லாம் இங்குதான் எடுக்கப்பட்டதா

மதுரை ஷூட்டிங் ஸ்பாட்... வண்டியூர் தெப்பக்குளம் - இந்த சீனெல்லாம் இங்குதான் எடுக்கப்பட்டதா

மதுரை தெப்பக்குளம்

மதுரை தெப்பக்குளம்

தண்ணீர் நிறைந்து ரம்மியமாக காணப்படும் மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தின் பின்னணியில் ஏராளமான திரைப்பட காட்சிகள் ஷூட்டிங் செய்யப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
புகழ் பெற்ற வைகை நதி கரையில் அமைந்துள்ள ஊர் மதுரை. சங்கம் வளர்த்த மதுரைக்கு ஏராளமான சிறப்புகள் இருக்கின்றன. மதுரை நதி கரையில் அமைந்துள்ள வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளமும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றது. இந்த தெப்பக்குளம் மதுரையின் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது.

அழகு ததும்பும் தெப்பக்குளம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இந்த குளம் தற்போது தண்ணீர் நிறைந்து அழக ததும்ப காட்சியளிக்கிறது.

இந்த குளத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க படகுப் சவாரியையும் தொடங்கி இருக்கிறது மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம். மதுரை வரும் சுற்றுலா பயணிகள் இந்த தெப்பக்குளத்தை சுற்றிப்பார்க்க தவறுவதில்லை. திருவாரூர், மன்னார் குடிக்கு அடுத்து மிக்பெரிய தெப்பக்குளம் இது.

மதுரை தெப்பக்குளம்


மதுரை நாயக்கர் மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. 1645ல் தெப்பக்குளமாக மாற்றி அதன் நடுவே மண்டபம் ஒன்றையும் கட்டினார் திருமலை நாயக்கர். 16 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த மிகப் பெரிய தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது.

நீர் இல்லாதபோது தெப்பக்குளம்


கடந்த 10 ஆண்டுகளாக இந்த தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டிருந்ததால் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மாறியிருந்தது. பின்னர், மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றில் இருந்த நிரந்தரமாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றது.

படகு சவாரி:

இதனால், கடந்த 3 ஆண்டுகளாக தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. படகுப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுவிட்டதால் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். ஒரு நபர் போட்டிங் செல்ல 20ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

ரஜினி முருகன் படத்தில் எடுக்கப்பட்ட காட்சி


வார நாட்களில் மாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு குவிகின்றனர். வார இறுதி நாட்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்வந்து செல்கின்றனர். தற்போது சினிமா ஷூட்டிங்கும், சீரியல் ஷூட்டிங்கும் தொடங்கி இருக்கின்றன. இந்த வண்டியூர் தெப்பக்குளத்தில் ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மதுரை தெப்பக்குளத்தில் வடிவேலு நடித்த காட்சி


ஷூட்டிங் ஸ்பாட்:

ராமராஜன் நடித்த எங்கஊரு பாட்டுக்காரன் படத்தில் வரும் ‘மதுர மரிக்கொழுந்து வாசம்’ பாடலின் சில காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டன.

விஜய் நடித்த கில்லி படத்தில் திரிஷாவை விஜய் கூட்டிக்கொண்டு ஓடும் காட்சிககளில் இந்த குளத்தைப் பார்க்கலாம்.

சிவகார்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தில் பாத ஜோசியம் பார்க்கும் நகைச்சுவை காடசிகள் இங்குதான் ஷூட் செய்யப்பட்டன.

வடிவேலு நடித்த ராஜகாளியம்மன் படத்தில் வரும் ‘தங்கச்சி என் தங்கச்சி’ பாடல் காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டன.

விஷால் நடித்த திமிரு படத்தில் வரும ‘மானாமதுர...’ பாடலின் சில காட்சிகள் இங்க எடுக்கப்பட்டன.

விஷ்ணு விஷால் நடித்த குள்ளநரி கூட்டம் படத்தில், அவர் தனது அண்ணணுடன் பைக்கில் போகும் காட்சிகள் இந்த குள்ளக்கரை சாலையில்தான் படமாக்கப்பட்டது.

விமல் நடித்த தூங்கா நகரம் படத்தில் வரும் டைட்டில் சாங்கில் இந்த குளத்தின் கரையில்தான் வடிவேலு அமர்ந்து ஆட்டம் போடுவார்.

அருள்நிதி நடித்த தகராறு படத்தில் ‘திருட்டு பயபுள்ள’ பாடல் இந்த குளத்தில்தான் ஷூட் செய்யப்பட்டது.

இதேபோல, சிவாஜி நடித்த பராசக்தி, பரத் நடித்த காதல், ஆடுகளம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இந்த வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தைப் பார்க்கலாம். அந்த அளவிற்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரையில் இது ஒரு முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாக இருந்து வருகிறது. திரைப்படம், டிவி சீரியல்கள் மட்டுமல்லாது மதுரை மக்கள் தங்கள் திருமண போட்டோ ஷூட்டையும் இங்கே நிகழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி