மதுரையில் இருந்து ஷீரடிக்கு ஆகஸ்ட் 21ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாவில் தங்கும் இடம், உணவு, உள்ளூா் சுற்றுலா போக்குவரத்து உள்பட அளிக்கப்படும் வசதிகளுக்கு ஏற்ப 30 ஆயிரம் ரூபாய், 24 ஆயிரம் ரூபாய், 16,900 ரூபாய் என்ற வகைகளில் கட்டணங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா செல்ல விரும்புவோர் ஆன்லைன் வழியாகவும், முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 73058-58585 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவா் மற்றும் அதற்கு மேற்பட்டோர் குடும்பமாகச் செல்லும்போது கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து, ஆகஸ்ட் 21ம் தேதி காலை 7.45க்கு புறப்படுகிறது. மேலும், திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை, எழும்பூா் வழியாக ஹைதராபாத் செல்கிறது. அங்கு சலா்ஜங் அருங்காட்சியகம், சாா்மினார், ராமானுஜா் சமத்துத்வ சிலை, கோல்கொண்டா கோட்டை ஆகியவற்றை சுற்றி பார்க்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர், ஆகஸ்ட் 24-ம் தேதி ஷீரடி சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து நாசிக் நகரில் திரியம்பகேஷ்வா், பஞ்சவடி, பண்டரிபுரம் பாண்டுரங்கா் தரிசனம், மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்தா் தரிசனத்தோடு சுற்றுலா நிறைவடைகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.