ஹோம் /மதுரை /

மதுரை-செங்கோட்டை ரயில்கள் 6 நாட்களுக்கு ரத்து - காரணம் இதுதான்

மதுரை-செங்கோட்டை ரயில்கள் 6 நாட்களுக்கு ரத்து - காரணம் இதுதான்

ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து

Trains canceled |மதுரை - செங்கோட்டை இடையேயான முன்பதிவு இல்லாத ரயில்கள் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

ரயில் பாதைகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால், மதுரை - செங்கோட்டை இடையேயான முன்பதிவு இல்லாத ரயில்கள் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை ரயில் கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதைகளை மேம்பாட்டு பணிகள் இந்த மாதத்தில் நடக்கின்றன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Must Read :விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா?

அதன்படி, மதுரை - செங்கோட்டை இடையேயான காலை 10:30 மணி முன்பதிவு இல்லாத ரயில், வரும் 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் (6 நாட்கள்) ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, செங்கோட்டை - மதுரை இடையேயான காலை 11:50 மணி முன்பதிவு இல்லாத ரயில், 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் (6 நாட்கள்) ரத்து செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், மதுரை - விழுப்புரம் இடையேயான அதிகாலை 4:05 மணி விரைவு ரயில், 8, 10, 11 மற்றும் 12ஆகிய தேதிகளில் திண்டுக்கலில் இருந்து அதிகாலை 5:05 மணிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Train