முகப்பு /மதுரை /

மதுரை புதுமண்டபத்தில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை.. பொதுமக்கள் அவதி!

மதுரை புதுமண்டபத்தில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை.. பொதுமக்கள் அவதி!

X
மதுரை

மதுரை புதுமண்டபம்

Madurai news: மதுரை கீழ ஆவணி மூல வீதி பகுதியில் இருக்கக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடமான புது மண்டபம் சாக்கடை தேங்கி நிற்கும் இடமாக மாறி வருகின்றது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை கீழ ஆவணி மூல வீதி பகுதியில் சித்திரைத் திருவிழா தொடக்கத்தில் இருந்து கடந்த 10 நாட்களாக சாலையில் சாக்கடைகள் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

மதுரை கீழ ஆவணி மூல வீதி பகுதியில் அருகில் இருக்கக்கூடிய நந்தி சிலை எதிர்ப்புறம்அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இடம் தான் புது மண்டபம். இந்த மண்டபம் முழுவதும் பல்வேறு வகையான கடைகள் இயங்கி வந்தன.இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புது மண்டபம் பகுதியில் இயங்கி வந்த கடைகள் அனைத்தையும் மாநகராட்சி மூலமாக எடுக்கப்பட்டு இப்பகுதியை வரலாற்று சிறப்புமிக்க இடமாக மாற்றப் போவதாக அறிவித்திருந்தார்கள். இதற்காக புது மண்டபம் பகுதி அருகிலேயே குன்னத்தூர் சத்திரம் என்ற ஒன்றைக் கட்டி அங்கு கடைகளை திறக்க அனுமதித்தார்கள்.

இந்த நிலையில், கடந்த 10நாட்களுக்கு மேலாக,அதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா தொடக்கத்திலிருந்து தற்பொழுது வரை கீழ ஆவணி மூல வீதியில் இருந்து புது மண்டபம் வரைக்கும் சாக்கடைகள் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கின்றது. இதனால் இப்பகுதி முழுவதும் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன்,வரலாற்று சிறப்புமிக்க இடமான புதுமண்டபம் சாக்கடை தேங்கி நிற்கும் இடமாக மாறி வருகின்றது. இது குறித்து அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மதுரை மாநகராட்சிக்கு புகார்கள் தெரிவித்தும், தற்பொழுது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனையாக தெரிவித்தனர்.

இது குறித்து அப்பகுதியில் உள்ள வியாபாரியான கணேசன் கூறும் பொழுது,அம்மன் சன்னதி அருகில் நந்தி சிலை பகுதியில் இருக்கக்கூடிய இடம்தான் இந்த கீழ ஆவணி மூல வீதி. கடந்த பத்து நாட்களாக இப்பகுதி முழுவதும் சாக்கடைகள் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இங்கேகடைகள் அமைந்திருக்கும்பகுதிகளிலும் சாக்கடைகள் பெருக்கெடுத்து ஓடுவதால், வியாபாரம் செய்வதற்கும் மக்கள் இப்பகுதியை கலந்து சொல்வதற்கும் மிகவும் சிரமமாக இருக்கின்றது. நாங்கள் அனைவரும் சேர்ந்து எத்தனையோ முறை மதுரை மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தும் தற்பொழுது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்கள் என்றார்.

இதையும் படிங்க | மதுரையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை.. வேரோடு சாய்ந்த மரங்கள்!

அதேபோல் அப்துல் கூறும் பொழுது, தீர்க்காமணி மூல வீதி சாலையில் செப்டிக் டேங்கில் இருந்து வெளியேறும் சாக்கடை நீரானது, சாலையில் இருந்து அருகில் இருக்கக்கூடிய புது மண்டபம் பகுதியில் தேங்கி நிற்கின்றது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரமற்ற முறையில் இருக்கின்றது. வரலாற்று சிறப்புமிக்க இடமான புது மண்டபம் தற்பொழுது சாக்கடைகள் தேங்கி நின்று சுகாதாரமற்ற இடமாக இருக்கின்றது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Madurai