Home /madurai /

மதுரை-செகந்திராபாத் சிறப்பு ரயில் ஒரு மாதம் கால நீட்டிப்பு.!

மதுரை-செகந்திராபாத் சிறப்பு ரயில் ஒரு மாதம் கால நீட்டிப்பு.!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரை-செகந்திராபாத் இடையேயான சிறப்பு ரயில் ஆகஸ்ட் மாதம் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை-செகந்திராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அதை ஆகஸ்ட் மாதம் வரை கால நீட்டிப்பு செய்வதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மதுரையிலிருந்து செகந்திராபாத்துக்கு சிறப்பு ரயில் ஜூலை மாதம் வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    செகந்திராபாத் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) செகந்திராபாத்திலிருந்து ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 22 வரை திங்கள் கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வந்து சேரும்.

    இதே போல், மதுரை-செகந்தராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07192) மதுரையிலிருந்து ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 24 வரை புதன்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரயிலானது திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூா், மிரியால்குடா, நலகொண்டா உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக நின்று செல்லும். தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

    செய்தியாளர்: ராஜீவ்காந்த்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி