ஹோம் /மதுரை /

புத்தக விரும்பியா நீங்கள்..? மதுரையில் குறைந்த விலையில் புத்தகங்கள் கிடைக்கும் இந்த கடை தெரியுமா?

புத்தக விரும்பியா நீங்கள்..? மதுரையில் குறைந்த விலையில் புத்தகங்கள் கிடைக்கும் இந்த கடை தெரியுமா?

X
புத்தகக்

புத்தகக் கடை

Madurai | மதுரை பெரியார் தங்கரீகல் தியேட்டர் அருகில் பரம்பரை பரம்பரையாக செகண்ட் ஹாண்ட் மூலம் குறைந்த விலையில் புத்தகங்கள் விற்கப்படுகின்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

விலை மதிக்க முடியாத சொத்துக்கள்னா அது புத்தகங்கள் தான். போன், லேப்டாப், டேப் என முழுக்க முழுக்க இணையதளத்திலேயே நமக்கு தேவையான தகவல்கள் கிடைத்தாலும் புத்தகம் தரும் அனுபவம் தனித்துவமானது. புத்தகங்கள் தான் தகவல்கள் களஞ்சியங்களை தன்னகத்தை நிரம்பக் கொண்டவை.

இந்த இணைய உலகிலும் ஏராளமானோர் புத்தகத்தை நாடிச் சென்றுகொண்டுதான் இருக்கின்றனர்.ஒரு நல்ல புத்தகம் நூறு நண்பர்களுக்கு சமம் என்று சொல்லுவார்கள்.

அப்படி புத்தக விற்பனையையே தொழிலாக கொண்டுவருகிறார் இவர். பெரியார் தங்க ரீகல்தியேட்டர் அருகில் இருக்கக்கூடிய பாக்யா புக்ஸ் சென்டரில் ஏராளமான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.வரலாற்று புத்தகங்கள், ஸ்கூல் புக் கைடு, காலேஜ் புக்ஸ், டிஎன்பிஎஸ்சி, நீட் போன்ற எக்ஸாம் புக்ஸ் என அனைத்து வகையான புத்தகங்களும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் கிடைக்கின்றன.

Madurai | காணும் பொங்கலுக்கு திருப்பரங்குன்றம் பூங்காவில் கூடிய மக்கள்

பிற மாவட்டங்களில் இருந்தும் இங்கு புத்தகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. புதிய புத்தகங்களைவிட இங்கே மலிவு விலையில் கிடைப்பதால் இங்கே ஏராளமானோர் வந்து வாங்கி பயன்பெறுகின்றனர்.

செய்தியாளர்: யுவதிகா, மதுரை.

First published:

Tags: Local News, Madurai